உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன விவகாரம்: சிபிஐ விசாரணை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன விவகாரம்: சிபிஐ விசாரணை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று (மே 7) ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தொடரலாம் எனவும், அதுவரை ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தை கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அதிகாரம் இல்லை

அப்போது மே.வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் கிருஷ்ணன் கவுல் கூறுகையில், 25 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்கள் சட்ட விரோதமாக நடந்தது என சி.பி.ஐ., கூட வழக்குப்பதிவு செய்யவில்லை. இத்தகைய உத்தரவு தொடர்ந்து இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். மே.வங்க பள்ளி சேவை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிடுகையில், பணி நியமனங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், ஓஎம்ஆர் விடைத்தாள்களின் ஓஎம்ஆர் ஷீட்கள் மற்றும் அதன் நகல்கள் அழிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு உறுதி செய்வது போல் ஜெய்தீப் குப்தா பதிலளித்தார். தொடர்ந்து சந்திரசூட் கூறுகையில், டிஜிட்டல் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியது தேர்வு வாரியத்தின் கடமை என்றார். இதற்கு ஜெய்தீப் குப்தா கூறுகையில், நியமனங்கள் தொடர்பான பணிகளை அவுட்சோர்சிங் முறையில் அளிக்கப்பட்டது என்றார்.

பொய் சொன்னதா?

இதற்கு தலைமை நீதிபதி, ''யாரிடம் அளிக்கப்பட்டது? சிபிஐ இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்துள்ளது. ஸ்கேனிங் செய்யவே ஆட்கள் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மொத்த தகவலையும் எடுக்க நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். மக்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. அந்த தகவல்கள் தங்களிடம் மட்டும் தான் உள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்வு வாரியம் பொய் சொன்னதா?'' என கேட்டார். அதற்கு ஜெய்தீப் குப்தா, 'இருக்கலாம்' என பதிலளித்தார்.

உத்தரவு ரத்து

இதனையடுத்து தலைமை நீதிபதி கூறுகையில், ''இது ஒரு மோசடி. அரசுப் பணிகள் இன்று அரிதானவை. அதனை சமூக பொறுப்புடன் பார்க்கப்படுகின்றன. இந்த நியமனங்களில் மோசடி நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர். அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், 25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தொடரலாம் என அனுமதியளித்த சந்திரசூட், அதுவரை ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
மே 07, 2024 22:45

போன வாரம் தமிழகத்தில் 16 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு நியமனம் ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. இது தப்பா சரியா உயர் நீதிமன்றம் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்றால் எதுக்கு இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என்று நேரடியாகவே உச்சநீதிமன்றம் விசாரணை செய்யலாம்


GMM
மே 07, 2024 19:55

எந்த நீதிமன்றமும் ரத்து செய்ய பரிந்துரை தான் செய்ய முடியும் சட்ட பூர்வ ஆவணங்கள் நீதிமன்றத்தில் இருக்காது ஆகவே உத்தரவிட கூடாது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அரசு ஆவணங்கள் பாதுகாப்பு கட்டாயம் தலைமை செயலாளர், கவர்னர் தவறிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய முடியும் உயர் நீதிமன்ற பரிந்துரையை காரணம் இல்லாமல், உச்ச நீதிமன்றம் மாற்ற முடியாது சி பி ஐ விசாரணை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி மற்றும் மறுப்புக்கு விதி இல்லை? இது சட்ட ஒழுங்கு, நிர்வாக நடவடிக்கை நீதிமன்றம் ஒரு பெரிய வியாபார, ஸ்தலமாக மாறி வருகிறது மத்திய அரசு மௌனம்


M Ramachandran
மே 07, 2024 19:39

ஆமாம் நீதி தி வர்களெ மம்முதா அடிஆட்கலிய்ய வைய்த்து சிபிஐ அகிற்க்காலிய்ய அடித்தார்களென காரையும் நொரூக்கினார்களெ அது உங்களுக்கு தெரியுமா ? அவர்களுக்குஉயிருக்கும் உடமைக்கும் யார் பொறுப்பு


அருண் பிரகாஷ் மதுரை
மே 07, 2024 19:37

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.மம்தா பானர்ஜி உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அன்றே சொல்லிவிட்டார்.நீதிமன்றங்கள் முறையாக செயல்படவில்லை என்றும் ஆனால் உச்சநீதிமன்றத்தை சொல்லவில்லை என்றும்.உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று யாரோ நிர்பந்தம் செய்வது போல உள்ளது.சரி வாய்மையே வெல்லும்.இந்த தீர்ப்பின் சாராம்சம் என்ன உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து என்றால் எதன் அடிப்படையில் ரத்து செய்தார்.ரத்து செய்வது தவறு செய்யவில்லை என்று அர்த்தம் வராதா.ரத்து செய்தால் எதற்கு சிபிஐ விசாரணை.ஏன் உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும்.விசாரணை முடிவில் தீர்ப்பு அளிக்க வேண்டும்.மக்கள் வரிப்பணத்தை வீண் செய்ய எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்.இந்த தீர்ப்பு கண்டிப்பாக தேர்தலை மனதில் வைத்தே கொடுக்கப்பட்டு உள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சார்பாக செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது.பொன்முடி வழக்கின் அதிர்ச்சி முடியவில்லை அதற்குள் மம்தா அரசு வழக்கு. இண்டி கூட்டணியின் உச்ச நீதிமன்ற தந்திரம் போல உள்ளது.அடுத்து கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவார்.பொது மக்கள் நீதி வேண்டி நீதிமன்றம் போவதால் கண்டிப்பாக பயன் இல்லை.தவறு செய்யும் அரசியல்வாதிகளை காப்பாற்றவே நீதிமன்றத்திற்கு நேரம் போதாது.


r ravichandran
மே 07, 2024 19:12

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது, நியாயமான முறையில் தேர்வு எழுதி வேலை கிடைக்காதவர்களுக்கு செய்யும் அநீதி போல தான்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி