உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடும் மேற்கத்திய ஊடகங்கள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடும் மேற்கத்திய ஊடகங்கள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். யூகங்களை கிளப்பிய ஊடகங்களை கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட விரும்பும் செய்திகளுக்கு உள்நோக்கம் இருக்கலாம்.விமான விபத்து புலனாய்வுப் பணியகம், விசாரணை முடியும் வரை பொறுமையுடன் இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது. நான் அவர்களை நம்புகிறேன்.எனவே யூகங்களை தவிர்க்கும் படி மேற்கத்திய ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன். முழு கருப்புப் பெட்டியையும் டிகோட் செய்வதிலும், இந்தியாவிலேயே தரவை ஆய்வு செய்வதிலும் விமான விபத்து புலனாய்வு பணியகம் அற்புதமான வேலையைச் செய்துள்ளனர்.இதுவே முதல் முறை இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் முந்தைய சம்பவங்களில், கருப்புப் பெட்டி சேதம் அடைந்ததாகக் காணப்பட்ட போதெல்லாம், தரவுகளை மீட்டெடுக்க அது எப்போதும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஏர் இந்தியா விமான விபத்தில், விமான விபத்து புலனாய்வு பணியகம் அனைத்தையும் வெற்றிகரமாக டிகோட் செய்திருப்பது இதுவே முதல் முறை. தரவு இங்கே உள்ளது. முதற்கட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை வரும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிப்பது, யாருடைய சார்பாகவும் ஒரு நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். முதற்கட்ட அறிக்கையை முழுமையாகப் படித்து வருகிறோம்.இறுதி அறிக்கைமேலும் பாதுகாப்பு வசதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சம்பவம் மற்றும் விசாரணையைப் பொறுத்த வரை, நாங்கள் எதையும் சொல்வதற்கு முன் இறுதி அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vijay D Ratnam
ஜூலை 20, 2025 22:14

உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடும் மேற்கத்திய ஊடகங்கள்:ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். பிகாஸ் ஏற்கெனவே உலகம் முழுக்க போயிங் விமான மெக்கானிசம் நாறிப்போய் கிடக்குது. ஏகப்பட்ட விபத்துக்கள், இயந்திர கோளாறுகள் என்று அடிக்கடி தாமதம், கேன்சல் என்று அமெரிக்காவின் போயிங் விமானத்தின் பெயர் நாறுது. எப்போதுமே விமான தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் இடத்தில இருக்கும் ஃபிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் அதை அழகாக பயன்படுத்திக்கொண்டு போயிங் விமான விற்பனையை காலி செய்து தனது மார்க்கெட்டை பெரியளவில் தனிக்காட்டு ராஜாவாக விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் போயிங் படியளக்கும் மேற்கத்திய ஊடகங்கள் அப்படி எழுதுவதில் ஆச்ரயம் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்நாட்டில் இருந்துகொண்டே புரளி கிளப்பிவிடும் யு ட்யுபர்களை என்னவென்று சொல்வது. டிவி டிபேட்ல அமர்ந்துகொண்டு கொடுக்குற காசுக்கு மேல கூவுற கூலிகளை என்ன சொல்வது. ஒருத்தன் சொல்றான் பைலட் குடும்ப சூழ்நிலை மன உளைச்சலில் இருந்தாராம். பைலட்டுகளுக்குள் முரண்பாடு இருந்ததாம் என்று அள்ளிவிட்டுக்கொண்டே இருக்கானுங்க. ஐயோ இந்த அரபு நாட்டுக்கு கக்கூஸ் கழுவ போறவிங்க அலப்பறை இருக்கே அது ஒரு ரகம். ஏர் இந்தியாவுல மனுஷன் போவானா, எமிரேட்ஸ்ல தான் போறேன், கத்தார் ஏர்வேஸில போறேன் என்று உதார் உடுறானுங்க. ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியதை பொறுக்க முடியாத ஒரு கும்பல் கதருது. போயிங் மெக்கானிசம் குறித்து எவனும் பேசமாட்டான், அந்தளவுக்கு அறிவு இருப்பவன் கூலிக்கு வந்து கூவமாட்டான்ல.


M Ramachandran
ஜூலை 20, 2025 20:30

வர வர அவர்களுக்கு நம்முன்னேற்றம் காண வயிற்றெரிச்சல்.கையாலாகாத கும்பல் சுய நல கையேந்தும் ஊடகங்களாய் வைத்து பீலா உட்டு கிட்டு மனதை தேற்றி கொள்கிறார்கள். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று மோடி மேலும் செய்ய வேண்டியதை செய்து கொண்டே போகிறார். அயல்நாடுகள் இருக்கட்டும். ராகுலே அவர்களின் ஏஜென்ட்டாக கடமையாக நெய்து கொண்டிருக்கிறார். அவர் தாய் நாடு அவரின் தாய்யின் வெள்ளை தோல் நாடு. பின் எப்படி இந்த நாட்டின் மீது பற்று இருக்கும். இங்கு கூற்றேவல் செய்ய அடிமைகள் இருக்கிறார்கள். பிரதமராக ஆகியிருந்தால் இங்கிலாந்து ராஜாவாக பிரகடன படுத்தி ஆட்சி அதிகாரம் செய்யலாம் என்ற கனவு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 19:32

பொறுப்பற்ற பேச்சு ....... உண்மைகளை மறைப்பது நமக்கு வேண்டுமானால் பழக்கமாகி இருக்கலாம் ..... மேற்கத்திய ஊடகங்களுக்கு இந்த நமது குணம் எரிச்சலை ஊட்டும் ...... காரணம் இறந்தவர்கள் அனைவருமே இந்தியர்கள் அல்லர் .....


என்றும் இந்தியன்
ஜூலை 20, 2025 19:02

ஒரே வரியில் இந்த விபத்தின் காரணம் இப்படித்தானிருக்கும் "fuel வால்வு விமானத்தின் கீழ் உள்ளது மூடப்பட்டது. பைலட் அங்கு கீழே சென்று மூடவில்லை. பின் யார் மூடியது வேண்டுமென்றே"


பெரிய குத்தூசி
ஜூலை 20, 2025 18:31

இந்தியாவின் உள் நாட்டு விமான சேவை சந்தை மிக பெரியது. ஆசியா நாடுகளில் வியாபார ரீதியாக கோலோச்சும் சிங்கப்பூர் தெமாசெக் முதலீடு நிறுவனத்தின் கீழ் இயங்கும் SIA எனப்படும் சிங்கப்பூர் AIRLINE விமான நிறுவனம் இந்த பொய் செய்திகள் பரப்புவதில் முன்னணி வகுக்கிறது . இதன்மூலம் airindia - டாடா நிறுவனத்தை வீழ்த்தி SIA பின்வாசல் வழியாக இந்திய சந்தையில் வர செய்யும் முயற்சி இது. சிங்கப்பூர் airline நிறுவனம் பல ஆண்டுகளாக இந்திய விமான சந்தையை ஆக்கிரமிக்க பல வேரறுக்கும் திட்டங்களை வைத்து செயல்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் பணம் முன்பு போல் இப்போது இல்லை. எனேபிற்றால் அமெரிக்கா ஐரோப்பா பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளாக அதாலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. சிங்கப்பூர் பொருளாதாரம் அமெரிக்கா ஐரோப்பாவின் நிழல் ஆகும். 2010 ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பொருளாதாரத்தை இயக்குவது 100% சீனா. இது இந்தியாவுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் சீனா அதிகாரிகளோடு கைகுலுக்கி, இரவு உணவு உண்டு தம் பிள்ளைகளுக்கு இங்குள்ள பல்கலை கழகங்களில் படிக்க இடம் வாங்கி, இங்கேயே பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி வெளிநாட்டில் செட்டில் செய்வதற்கான வேலைகளை மட்டுமே செய்கிறார்கள். நாட்டிற்கு எதிராக வெளிநாடுகள் என செய்கிறது என்பதை தனது சுயலாபத்திற்க்காக இந்திய அரசுக்கு 80 சதவிகிதம் தெரிய படுத்துவது கிடையாது. உண்மையை மறைத்து விடுவார்கள். இப்போது இந்தியாவில் செயல்படும் DBS வங்கி, மற்றும் AIRTEL நிறுவனங்கள் வெளித்தோற்றத்தில் உண்மையில் சிங்கப்பூர் நிறுவனங்களாகும். ஆனால் இதன் பின்னணியில் சீனாவின் பெரும் பொருளாதார முதலீடு செயல் இருக்கிறது. சீனா நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்ய நிறைய மத்திய அரசின் சட்ட கட்டுப்பாடு செயல்முறைகள் இருப்பதால் தனது முதலீடுகளை சிங்கப்பூர் அரசு முதலீடு நிறுவனமான GIC Government Investment Corporation என்னும் அரசு நிறுவனத்தின் கீழ் இயங்கும் TEMASEK எனப்படும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனம் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பில் சிங்கப்பூர் தெமாசெக் நிறுவனங்கள் குழுமங்களான CAPITAL LAND நிறுவனம் மூலம் மற்றும் ஏர்டேல் தொலைத்தொடர்பு துறை, மற்றும் DBS வங்கி மூலம் சீனா தனது முதலீடுகளை இந்தியாவில் செய்கிறது. பார்ப்பதற்கு சிங்கப்பூர் நிறுவன brand மட்டும் தெரியும், ஆனால் இதை நம் இந்திய வெளிநாட்டு முதலீடு புலனாய்வு அதிகாரிகள் சுயலாபத்திற்காக கண்டும் காணாமல் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக சிங்கப்பூர் temasek முதலீடு நிறுவனம் இந்தியாவின் சொத்து சந்தை மற்றும் பெரும் வணிக சம்பந்த கட்டிடங்களை கட்ட பல தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்து இந்தியாவின் 20 முக்கிய நகரங்களில் சொத்து சந்தையில் சீனா தனது முதலீட்டை சிங்கப்பூர் தெமாசெக் முதலீடு நிறுவனம் வழியாக அதாவது சீனா சிங்கப்பூரை பயன்படுத்தி பின்வாசல் வழியாக முதலீடு செய்வது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான விஷயம் இந்தியாவில் இயங்கும் ஏர்டேல் தொலைத்தொடர்பு நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனமாக சிங்கப்பூர் அரசின் சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனமான SINGTEL லின் 100 சதவிகித முதலீட்டில் இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த singtel நிறுவனம் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான TEMASEK முதலீடு நிறுவனத்தின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் செயல்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய அரசின் தொலைத்தொடர்பு சட்டவிதிகளின்படி சீனாவில் தயாராகும் 5G தொழில்நுட்ப specturm ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை பயன்படுத்த கூடாது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் Huawei brand ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை singtel மூலம் இறக்குமதி செய்து வேறு பெயரில் அலைக்கற்றையை இந்திய ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்தி வருவது இந்திய தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு தெரியுமா? இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இதுபற்றி புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிங்கப்பூரின் தெமாசெக் முதலீட்டு நிறுவனமான CAPITAL LAND எனப்படும் சொத்து சந்தை முதலீடு நிறுவனம் நம் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்தும் சொத்து முதலீடு நிறுவனத்தின் வாயிலாக சீனா வின் பணம் தமிழகத்திலும் இந்தியாலும் பெரும் சொத்து மேம்பாடுகளில் முதலீடு செய்கிறது. இந்த பின்புறவாசல் வழியாக வரும் சீனா முதலீடுகள் இந்தியாவின் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பது குறிப்பிட தக்கது.