நிலையான கழிவு என்றால் என்ன?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தில் இருந்து, அவரது வரிக்குரிய வருவாயை குறைவாக காட்டுவதற்கு அரசு அனுமதிக்கும் தொகை, 'ஸ்டாண்டர்டு டிடக் ஷன்' எனப்படும் நிலையான கழிவு. இந்த தொகைக்கு, எந்த செலவுக்கான ஆதாரத்தையும், சமர்ப்பிக்க தேவையில்லை. வருமான வரிச் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில், இது 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டது; 2006ல் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது நீக்கப்பட்டது. மீண்டும், 2018ல் அருண் ஜெட்லி அதை கொண்டு வந்தார். பழைய வரிமுறையில் நிலையான கழிவு, 50,000 ரூபாயாக நீடிக்கும் நிலையில், புதிய முறையில் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 75,000 ரூபாய் அனுமதிக்கப்பட்டது; அது இந்த பட்ஜெட்டிலும் மாற்றமின்றி நீடிக்கிறது.