உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் தேசிய மொழி எது?- ஸ்பெயினில் கனிமொழி நச் பதில்

இந்தியாவின் தேசிய மொழி எது?- ஸ்பெயினில் கனிமொழி நச் பதில்

புதுடில்லி: இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்ட ஸ்பெயின் நாட்டு பிரதிநிதிகளுக்கு, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி, 'வேற்றுமையில் ஒற்றுமை' என பதிலளித்து கவனம் ஈர்த்தார். பாக்., பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, ஏழு எம்.பி.,க்கள் தலைமையிலான குழு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.அதன் ஒருபகுதியாக, தி.மு.க.,- - எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு, ஐரோப்பிய நாடான ஸ்பெயின் சென்றது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்திய குழுவினர் கலந்துரையாடினர்.அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எம்.பி., கனிமொழி, 'வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தேசிய மொழி. இந்தக் குழு உலகிற்குக் கொண்டு வரும் செய்தியும் இதுதான்' என்றார். இந்த பதிலுக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் சில நிமிடங்கள் கைதட்டினர். கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு ஐந்து நாடுகள் பயணத்தை முடித்து, நேற்று நாடு திரும்பியது. இந்தக் குழுவில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராஜிவ்குமார் ராய், பாஜ.,வின் பிரிஜேஷ் சவுதா, ஆம் ஆத்மியின் அசோக் மிட்டல், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பிரேம்சந்த் குப்தா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Priyan Vadanad
ஜூன் 06, 2025 23:05

One nation one language, One nation one education tem, One nation one religion, and issues like these will be used just to divide our beautiful and country country INDIA. Long live Mother India. வேற்றுமையில் துலங்கிடும் சமத்துவ இந்திய தாயே, நீடுழி வாழ்க.


Priyan Vadanad
ஜூன் 06, 2025 23:04

இதைவிட பெருமைக்குரியதாய் இந்திய பொது மொழி எதுவென்று குறிப்பிட இனிமேல் முடியாது. இந்தியை திணிப்பவர்களுக்கும், அப்படி திணிப்பதை ஆதரிப்பவர்களுக்கும் இது வேப்பிலை கஷாயம் குடிப்பது போல இருந்திருக்கும். One nation one language, One nation one education tem, One nation one religion, and issues like these will be used just to divide our beautiful and country country INDIA. Long live Mother India. வேற்றுமையில் துலங்கிடும் சமத்துவ இந்திய தாயே நீடுழி வாழ்க.


Priyan Vadanad
ஜூன் 06, 2025 22:53

இந்தியை திணிப்பவர்களுக்கும், அப்படி திணிப்பதை ஆதரிப்பவர்களுக்கும் இது வேப்பிலை கஷாயம் குடிப்பது போல இருந்திருக்கும்.


xyzabc
ஜூன் 04, 2025 08:21

கனி மா, தூள் கிளப்பிட்ட. நம்ப முடியல. ஒரு சுத்த திராவிடன் பேசுவது ஆச்சர்யம்.


Sivagiri
ஜூன் 04, 2025 08:11

அதுசரி... அங்கேயும் போயி கருணாநிதி-திமுக டெக்னீகை காண்பித்து விட்டார்.. நிருபர் கூட்டத்துக்கு நடுவே, அவரே செட்டப் செய்த ஆட்கள், எழுதி கொடுத்த கேள்விகளை கேட்பார். இவர்களும், வழக்கம்போல, ரெடிமெட் பதில்களை உதிர்த்து விடுவார்கள், சுற்றி இருப்பவர்கள், உடனே ஒரு பாராட்டுக் கவி பாடி விடுவார்கள் . . .


சொல்லின் செல்வன்
ஜூன் 04, 2025 12:03

என்னமோ கூடவே ஸ்பெயினுக்கு போயிட்டு வந்தமாதிரி அடிச்சுவிடறீங்களேண்ணே


முக்கிய வீடியோ