உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாறு கருணை காட்டும்: பதவி விலகும் போது மன்மோகன் சிங் சொன்னது இதுதான்!

வரலாறு கருணை காட்டும்: பதவி விலகும் போது மன்மோகன் சிங் சொன்னது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'எதிர்க்கட்சியினர், சமகால ஊடகங்களை காட்டிலும், வரலாறு என் மீது கருணையுடன் இருக்கும் என்று நம்புகிறேன்' என 2014ல் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். நீண்ட காலம் அரசியல் பதவியில் இருந்தாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், விமர்சனங்கள் எதையும் வெளிப்படுத்தாதவர் மன்மோகன் சிங். கடந்த 2014ல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பில், கேள்விக்கு பதில் அளித்து மன்மோகன் சிங் கூறியதாவது: நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. எதிர்க்கட்சியினர், சமகால ஊடகங்களை காட்டிலும் வரலாறு என்மீது கருணையோடு இருக்கும் என்று நம்புகிறேன். நேர்மையாக இருந்தேன் என்பதை நான் நம்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன், என்ன செய்ய வில்லை என்பதை வரலாறு தீர்மானிக்கும். அடுத்த பிரதமர் ஐ.மு., கூட்டணியில் இருந்து வருவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது பிரதமர் பதவி காலத்தில் பதவி விலகுமாறு என்னை யாரும் வற்புறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

அப்பாவி
டிச 28, 2024 10:13

நாட்டுக்கே பிரதமரா இருந்திட்டு எலும்பு துண்டு எம்.பி யா போயிட்டாரேன்னு வருத்தம். வரலாறு மன்னிக்காது.


venugopal s
டிச 28, 2024 09:06

மன்மோகன்சிங் அவர்களைப் பற்றிய வரலாற்று உண்மையை மாற்றி எழுதுவது என்ன பெரிய விஷயமா?


Balaji
டிச 27, 2024 17:08

ஊழலை சமூகநீதி பட்டியலில் சேர்த்தது இவர் வரலாறு.. பங்களாதேசுக்கு ஒரு முஹம்மது யூனிஸ்.. இந்தியாவிற்கு இவர்.. பங்களாதேஷ் அழிவின் விளிம்பில்.. டிரம்ப் வந்தபிறகு நிலை மாறும் என்று நினைக்கிறேன்.. இந்தியா தப்பியது அதன் தனித்துவத்தைக் காட்டுகிறது..


Anand
டிச 27, 2024 15:53

தங்களுக்கு பிடிக்காத வரலாறை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காந்திக்கும் நேருக்கும் இதே நிலைதான்


AMLA ASOKAN
டிச 27, 2024 15:38

மன்மோகன்சிங்கின் மறைவு மூலம் அன்றைய பிரதமருக்கும் இன்றைய பிரதமருக்கும் உள்ள ஏகப்பட்ட வேறுபாடுகள் தெளிவாக தெரிகின்றன . உலகின் எந்த மூலையிலும் அவருக்கு இணையான ஒரு பொருளாதார மேதை பிரதமர் ஆனதில்லை . ஆனால் ............. ?


அப்பாவி
டிச 27, 2024 15:01

வரலாறு உங்களை விட மோசமானவங்களைப் பாத்துடுச்சு. உங்களையும் பாத்தாச்சு. இப்பவும் பாத்துக்கிட்டிருக்கு. இனிமேலும் பார்க்கும்.


aaruthirumalai
டிச 27, 2024 14:33

நல்ல மனிதர், சாந்தமானவர்.


Sidharth
டிச 27, 2024 13:32

உண்மைதான். உங்களை பழித்த பாவத்திற்கு நாங்கள் ஒரு கும்பலிடம் சிக்கி சீரழிகிறோம் அய்யா


Muralidharan S
டிச 27, 2024 13:31

துரோணாச்சார்யார் மற்றும் டாக்டர் சிங் இருவரையும் வரலாறு கண்டிப்பாக நினைவில் வைத்திருக்கும் - " செயலாற்றும் பதவிகளில் இருந்தும், அமைதியாக பிறர் குற்றங்களை மௌனமாக வேடிக்கை பார்த்தனர் என்று...


Muralidharan S
டிச 27, 2024 13:27

அரியணை மீதான விசுவாசத்தால் துரியோதனனிடம் கட்டுண்ட துரோணாச்சாரியார்... கான்-கிராஸ் கூட்டணி தர்மத்தால் மற்றும் இத்தாலி தலைமையின் மீது இருந்த விசுவாசத்தில் கட்டுண்ட டாக்டர் சிங்... இருவருமே, தங்கள் சொந்த நலனுக்காக நெருக்கடியான தருணங்களில் கூட பதவிக்காக விசுவாசமாக இருக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகத் தோன்றினர்.


புதிய வீடியோ