உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி

பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி

புதுடில்லி: காங்கிரசில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களை ராகுல் எப்போது கட்சியில் இருந்து நீக்குவார் என்று மாஜி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரசில் உள்ள சில தலைவர்கள் பா.ஜ.,வுக்காக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் களை எடுக்கப்பட வேண்டும் என்றார். இந் நிலையில், காங்கிரசில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களை ராகுல் எப்போது கட்சியில் இருந்து நீக்குவார் என்று மாஜி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது; எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்த சமயத்தில் குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது ஹிந்து மக்களை காயப்படுத்தும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் உண்மை என்னவெனில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. மத ரீதியாக அவர்களை பிளவுப்படுத்தியது. காங்கிரசில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்று ராகுல் பேசியதை ஆதரிக்கிறேன். அவர்களை எப்போது நீங்கள் (ராகுல்) களையெடுக்க போகிறீர்கள்?இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பேசும் தமிழன்
மார் 10, 2025 08:25

பப்பு என்ற ராகுல் கான் அவர்களே... பிஜெபி B டீம் தான்... பிஜெபி கட்சியின் வெற்றிக்கு வாய்க்கு வந்தபடி உளறி கொட்டி கடுமையாக உழைப்பவர்.. அப்படியே நீக்க வேண்டும் என்றால் அவரை தான் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.


Iniyan
மார் 10, 2025 05:52

காங்கிரஸ் ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது


J.V. Iyer
மார் 10, 2025 05:11

பாப்பு ராகுல் கான் அவர்களே ஒரு பாஜக ஆதரவாளர். எண்ணத்தை சொல்ல?


வாய்மையே வெல்லும்
மார் 10, 2025 04:30

ராவுளை எப்போது வெளியேற்றுவது என்பதை மக்கள் என்றோ முடிவு செய்துவிட்டனர். சிறுபிள்ளை ஆட்டம் கோலிக்குண்டு க்கு சமம் என்பது சான்றோர் வாக்கு . இனிமே அவர் கட்சி இருந்தா என்ன அதுவயசுக்கு வராட்டி நமக்கென்ன .. நமக்கு வேண்டியது எல்லாம் காங்கிரஸ் முகத் பாரத் இல்லையாடா


R.MURALIKRISHNAN
மார் 09, 2025 23:33

ராகுல் பேசுவதெல்லாம் பாஜக விற்கு ஆதரவாக மாறுகிறது. அப்படியெனில் முதலில் வெளியேற்றப்படவேண்டியவர் ராகுல் தான்.


nv
மார் 09, 2025 22:50

முதலில் ராகுல் மற்றும் அந்த குடும்பத்தை தூக்கி எறியுங்கள், காங்கிரஸ் தானாக வளரும்


Chandrasekar SNC
மார் 09, 2025 22:17

மத்திய பிரதேச பெரியார். 70 = 27.


Shankar
மார் 09, 2025 21:56

காங்கிரஸ் கட்சி ஜாதி மத அரசியலிலிருந்து விடுபட்டால் தான் ஏதாவது தேறும். இல்லைன்னா கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான்.


சிட்டுக்குருவி
மார் 09, 2025 21:10

ராகுல் கட்சியில் என்ன பதவியில் உள்ளார்? அவருக்கு கட்சியில் உள்ளவர்களை நீக்கா அதிகாரம் உண்டா? அப்போ கார்கே க்கு என்ன பதவி/அதிகாரம்?


RAJASEKAR
மார் 09, 2025 20:48

மீதி நீயும் ராகுலும் தான் இருப்பீங்க.


புதிய வீடியோ