உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய வருமான வரி மசோதா தாக்கல் எப்போது: பா.ஜ., தகவல்

புதிய வருமான வரி மசோதா தாக்கல் எப்போது: பா.ஜ., தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிய வருமான வரி மசோதா பிப்.13 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது என்று பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் வாக்குறுதியளித்த புதிய வருமான வரி மசோதா வியாழக்கிழமை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இது குறித்து பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:இந்த மசோதா வரிச் சட்டங்களின் மொழியை எளிமைப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் அது பார்லிமென்ட் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும்.மொழி எளிமைப்படுத்தல் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள உதவும். இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும். வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை அளிக்கும்.மறுஆய்வை மேற்பார்வையிட மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு உள் குழுவை அமைத்துள்ளது. மேலும், 60 ஆண்டு கால சட்டத்தை மாற்ற முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்ய 22 சிறப்பு துணைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.மசோதாவை வரைவதற்கு முன்பு, மத்திய அரசு மக்களிடமிருந்து நான்கு பிரிவுகளின் கீழ் உள்ளீடுகளைக் கோரியது.இதில் வருமான வரித் துறை 6,500 பரிந்துரைகளைப் பெற்றது.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
பிப் 12, 2025 12:12

ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட விவசாய வருமானத்துக்கு வரி விதிக்க வேண்டும். அரசியல்வாதிகளால் விவசாய வருமான வரிவிலக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.


KRISHNAN R
பிப் 12, 2025 06:48

நன்று. இருக்கும் சட்டங்களை வளைக்காமல்.. இருந்தா போதும்


முக்கிய வீடியோ