உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் எங்கே வசிக்கிறார் ஷேக் ஹசீனா; வெளியான புதிய தகவல்

இந்தியாவில் எங்கே வசிக்கிறார் ஷேக் ஹசீனா; வெளியான புதிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா, இந்தியாவில் எங்கே இருக்கிறார் என்ற புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய பெரும் போராட்டம் அந்நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தியது.மாணவர்கள் போராட்டம் வெகுண்டு எழுந்ததால், அங்கு பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ, தமது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் அவருக்கு அடைக்கலமும் கொடுக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சுட்டுக் கொல்லுமாறு ஷேக் ஹசீனா பேசியது போன்ற ஒரு உரையாடல் வெளியாகியது. அது உண்மையானதா, பொய்யானதா என்று தெரியாத நிலையில் அதை ஆதாரமாக வைத்து, வங்கதேச நீதிமன்றம், மனித குலத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.ஷேக் ஹசீனாவை குற்றவாளி என்று அறிவித்த வங்கதேச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரங்களை அறிந்த ஷேக் ஹசீனா, இந்த தண்டனை பாரபட்சமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.அதே சமயத்தில் அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம், வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில், இந்தியாவில் ஷேக் ஹசீனா எங்கே தங்கி உள்ளார், அவரது முகவரி என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அந்த தகவல்களின் விவரம் வருமாறு; இந்தியாவில் புதுடில்லியில் ஷேக் ஹசீனா தற்போது லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில் (Lutyens Bungalow Zone) வசித்து வருகிறார். இந்த பகுதி மத்திய டில்லியில் உள்ளது. அதி உயர் பாதுகாப்பு கொண்டது என அறியப்பட்ட பகுதியாகும்.இங்கு ஷேக் ஹசீனாவுக்கு அதி உயர்ந்த பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. லுட்யென்ஸ் பங்களா எப்படி இருக்கும்? லுட்யென்ஸ் பங்களா மண்டலம் மத்திய டில்லியில் 2,800 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டதாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை வல்லுநர்களான எட்வின் லுட்யென்ஸ், ராபர்ட் டோர் ரசல் ஆகியோரால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது. அரசின் முக்கிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், அவர்களின் அலுவலகங்களை கொண்டது. மேலும், உயர்தர வசதியுடன் கூடிய பங்களாக்கள், பசுமையான இடங்களும் உண்டு. இங்கு ஒரு சிறிய பகுதி தனியாருக்குச் சொந்தமானது. லுட்யென்ஸ் பங்களா மண்டலமானது பொதுவாக டில்லியின் இதயம் போன்ற பகுதி என்று உருவகப்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Radja
நவ 17, 2025 22:44

ஷேய்க் ஹசீனா உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த பத்திரிக்கை தான் பொறுப்பு ஆகும். மத்திய அரசு இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Radja
நவ 17, 2025 22:41

இந்த மாதிரியான உயிர் பாதுகாப்பு சம்பந்தமான விவரங்களை வெளியிடக்கூடாது.ஆனால் இந்த கேவலமான பத்திரிக்கைகள் செய்கும் கீழ்த்தரமான செய்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய புலனயவு துறை இந்த பத்திரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணும். அதுவும் தமிழ்நாட்டு மீடியாக்கள் மிகவும் கீழ்தரமானவைகள் .இதுவே இந்நேரம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடந்தால் இந்த கேவலமான பத்திரிக்கை உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிடும்.


Santhakumar Srinivasalu
நவ 17, 2025 21:01

இதை வெளியிட்டால் அவருக்கு பாதுகாப்பு உண்டா?


தமிழ்வேள்
நவ 17, 2025 20:57

இந்த அம்மணி மீதான குற்றச்சாட்டுக்கள் மனித குலத்திற்கு விரோதமானது என்றால், இந்த நாட்டில் கடந்த 900 ஆண்டுகளுக்கு மேலாக, முஹம்மது பின் காசிம் முதல் பகதூர் ஷா ஜாபர் ஈறாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் செய்த சொல்லொணாத கொடுமைகள் சித்திரவதைகள வன்புணர்வுகள உயிரோடு வைத்த சமாதிகள் இடித்த கோவில்கள் ஆகியவை என்ன மனித நேய செயல்பாடுகளா? பாரத துணைக்கண்டத்தில் இஸ்லாம் ஆடிய வெறியாட்டத்துக்கு பதிலை இஸ்லாமிய சந்ததிகள் சொல்லியே தீரவேண்டிய தலைகுனிந்து நிற்க வேண்டிய நாட்கள் அண்மையில் தான் உள்ளன.கர்மக் கணக்கு அழிக்கவோ அட்ஜஸ்ட் செய்யவோ இயலாத ஒன்று...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை