உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி

எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98. 24 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டு மே 19ம் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் மதிப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டது முதல் பொதுமக்கள் அவற்றை வங்கிகளில் திரும்ப செலுத்தினர்.அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 30ம் தேதி, 98.24 சதவீதம் நோட்டுகள் திரும்ப வந்து விட்டன. ரூ.6,266 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் (1.76 சதவீதம்) திரும்ப வரவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராத நோட்டுகள், இந்தியா மட்டுமின்றி, நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பெரிய குத்தூசி
மே 02, 2025 20:33

என்ன தம்பி சீப்பை ஒளிச்சுவெச்சு கல்யாணத்தை நிப்பாட்டுற கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றீங்க. மூளை முடுக்குல UPI சேவைஇருக்கு பாமரன்கிட்டேகூட ஸ்மார்ட் போன் வெச்சி ஸ்கேன் pay பண்ணிட்டு போயிட்டு இருக்கான், இந்திய அரசாங்க பிளானைதெரிஞ்சிக்கோங்க. வரும் காலத்தில் 100, 50, 20, நோட்டுகள் மட்டும் புழக்தில் இருக்கும், எல்லாமே டிஜிட்டல் பண பரிவர்த்தனைதான். அப்போதுதான் பாகிஸ்தான் மாதிரி ஆளுங்க கள்ளநோட்டு அடிச்சி பாய்கிட்டே குடுத்து கல்லெறிய சொல்லமுடியாது. 200 உபி க்கு பணம் பட்டுவாடா பண்ணமுடியாது. 100, 50 ரூவா நோட்டு கள்ள நோட்டு அடிச்சி வுடுறதுனால ஒன்னும் பயன் இல்லை பாகிஸ்தானுக்கு.


M.Sam
மே 02, 2025 19:28

இந்த கணக்கு எல்லாம் செல்லாது செல்லாது... உண்மை நிலை இது இல்லை


Ramanujam Veraswamy
மே 02, 2025 18:52

It can be d invalid immediately without allowing additional time for realisation/circulation.


spr
மே 02, 2025 17:33

பல நாடுகள் இது போலப் பண மதிப்பிழப்பு செய்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் வங்கி அதிகாரிகள் இடைத்தரகர்களாக மாறியதால் குழப்பங்கள் குளறுபடிகள் நடந்தன. சிலரது அறியாமையாலும், கள்ளப்பணம் என்று அறிவிக்கப்பட்டால் பிரச்சினையோ என்று அஞ்சியதால் சிறுவாடு மூலம் சேர்த்த பணம் வங்கிக்குப் போகாமலேயே வீணானது அறிந்த ஒன்றே. அரசு இன்னும் சிறிது கால அவகாசம் கொடுத்திருக்கலாம் முறையாக விழிப்புணர்வு உண்டாக்கியிருக்கலாம் கள்ளப்பணம் சிறிது காலம் முடங்கியது கந்து வட்டி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது அவை இப்போது வேறு வகையில் அதிகரித்து வருகிறது. ஒரு வேளை அந்நிய நாடுகளை போல 100,50,20,10,மற்றும் 5 ரூபாய்த்தாளை மட்டுமே வைத்துக் கொண்டு இதர பரிமாற்றம் அனைத்தும் வங்கிகள் மற்றும் அட்டைகள் மூலம் என்றால் இன்னும் கொஞ்சம் கட்டுக்குள் வரலாம் ஆனால் திரையுலகம், நிலங்கள் வீடு கட்டுவது போன்ற இதர வழிகளில் கறுப்புப் பணம் இன்னமும் புழக்கத்தில் இருப்பது அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியும் தெரிந்தும் "கண்டு கொள்ளாமல்" இருப்பது வழக்கமே


GMM
மே 02, 2025 17:10

பலரிடம் குறைந்த அளவு 10 க்கு கீழ் இடம் மாறும்போது மறதியில் விட்டு இருக்கலாம். பெண்கள் பலசரக்கு பெட்டியில் வைக்கும் பழக்கம் உண்டு. பெரிய கள்ள பண முதலைகள் மாற்றி விட்டனர்.௨௦௦௦ நோட்டை பணமக்கும் முறை எளிது படுத்த வேண்டும். குறைந்தது ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் வங்கிக்கணக்கு வைத்து இருந்தால், மத்திய வங்கிக்கு அனுப்பி பணமாக முறை படுத்தி தந்தால், நல்லது.


Seekayyes
மே 02, 2025 16:44

சரி, அப்ப ₹2000 நோட்டுகள் மே 15 முதல் செல்லாது என்று அரசாங்கம் அறிவிக்கலாமே?


visu
மே 02, 2025 17:29

அடுத்தது அதுதான் ஆனால் அதுதான் ஏற்கனவே புழக்கத்திலேயே இல்லையே இனி பதுக்கி வைப்பவர்கள் குறைந்த அளவில்தான் மாற்றமுடியும் இன்னும் வராமல் இருப்பது 6000 + கோடி


sundarsvpr
மே 02, 2025 15:15

வங்கிகளில் 500 ரூபாய் தாள்களை தவிர 100 20 10 ரூபாய் தாள்கள் இல்லை. இதனால் அவதிப்படுவது நடுத்தர மக்கள். வியாபார கடைகளிலும் சிறு தொகை தாள்கள் இல்லை. இதனால் இந்த மீதி பணத்துக்குரிய பொருட்கள் வாங்கவேண்டிய நிர்பந்தம். வங்கிகளில் எல்லா கணக்கு வைத்து இருபவர்களுக்கு குறைந்த டெனோமினேஷன் தாள்கள் சிறுது கட்டாயம் கொடுக்கவேண்டும். ரசர்வு வங்கி கவனத்தில் கொள்வது நல்லது.


Suppan
மே 02, 2025 16:18

அதற்குத்தான் UPI இருக்கிறது. இதனால் சில்லறை தேவை, ATM தேவை குறையும்


ஆரூர் ரங்
மே 02, 2025 16:34

சிறிய மற்றும் நடுத்தர தனியார் வங்கிகளில் 20, 50, 100 தாள்கள் கிடைக்கின்றன. மற்ற வங்கிகளில் மின்னணு பரிமாற்றமே அதிகம் என்பதால் அங்கு அவ்வளவாக கிடைப்பதில்லை.


Kumar Kumzi
மே 02, 2025 16:35

ஆக நீ வங்கி அட்டையை பயன்படுத்துவது இல்லை போல் தெரிகிறது


PR Makudeswaran
மே 02, 2025 15:13

லஞ்சப் பணம் கள்ள பணம் ஆகவும் இருக்க வாய்ப்பு உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை