உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு நலத்திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ.70,000 கோடி எங்கே? பீஹார் அரசிடம் கணக்கு கேட்கிறது சி.ஏ.ஜி.,

அரசு நலத்திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ.70,000 கோடி எங்கே? பீஹார் அரசிடம் கணக்கு கேட்கிறது சி.ஏ.ஜி.,

பாட்னா: 'பீஹாரில், அரசு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், 70,000 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழை, மாநில அரசு சமர்ப்பிக்கவில்லை' என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், அந்த திட்டங்களுக்கான நிதியில் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், 2023 - 24ம் நிதியாண்டிற்கான மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முடிக்கப்பட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு திட்டங்களுக்கான, செலவின பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த, 2023 - 24ம் நிதியாண்டில், பீஹாரின் மொத்த பட்ஜெட் 3.26 லட்சம் கோடி ரூபாய். இதில், 79.92 சதவீதமாக 2.60 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள, 65,512.05 கோடியில், 23,875.55 கோடி ரூபாயை மட்டும் திருப்பி செலுத்தியுள்ளது. அந்த நிதியாண்டில், மாநிலத்தின் செலவுகள் முந்தைய ஆண்டைவிட 12.34 சதவீதம் அதிகரித்துள்ளன. சான்றிதழ் மாநிலத்தின் மொத்த நிலுவையில் உள்ள கடன்களில் உள்நாட்டு கடன் 59.26 சதவீதம். நிகர கடன்கள் முந்தைய ஆண்டைவிட, 28,107.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன. அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை குறிப்பிட்டு நிதி பெறப்படுகிறது. அவற்றை செலவு செய்த பின், அதற்கான யூ.சி., எனப்படும், அந்தப் பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். திட்டம் முடிந்து ஓராண்டுக்குள் அந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், 2024, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 70,877.61 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களுக்கான 49,649 சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. இதில், 14,452.38 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் 2016 - 17ம் நிதியாண்டுடன் தொடர்புடையவை. அதிகபட்சமாக பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 28,154.10 ரூபாய்க்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. கல்விக்கான 12,623.67 கோடி ரூபாய், நகர்ப்புற மேம்பாட்டுக்கான 11,065.10 கோடி ரூபாய், கிராமப்புற மேம்பாட்டிற்கான 7,800.48 கோடி ரூபாய், விவசாயத்துக்கான 2,107.63 கோடி ரூபாய் ஆகியவற்றிற்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. திட்டம் துவங்குவதற்கு முன்னரே பெறப்பட்ட தொகையில், 9,205.76 கோடி ரூபாய்க்கான, 22,130 சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. சந்தேகம் இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிதி, அதற்காக செலவிடப்படாமல் வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெரிய அளவிலான தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், அந்த நிதியில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புஇருக்கிறது. இந்த விவகாரத்தில், பொது பணத்தை தவறாக பயன்படுத்தியதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sasikumaren
ஜூலை 26, 2025 17:30

மக்கள் வரிப்பணம் மத்திய அரசு பறித்து கொள்கிறது பறித்த பணத்தை மாநிலங்களுக்கு தரப்படுகிறது பிறகு அந்த பணத்தில் தொண்ணூறு சதவீதம் அரசியல் வியாதிகள் அதிகாரிகள் பறித்து கொள்கிறான்கள் மக்களுக்கு பத்து சதவிகிதம் சென்று சேர்ந்தால் மிகப்பெரிய சாதனை தான்


venugopal s
ஜூலை 26, 2025 14:59

நிதிஷ்குமார் பாஜக பக்கம் சாயும்போதே தெரியும், இது போன்ற ஏதோ வில்லங்கத்தில் இருந்து தப்பிக்கத்தான் என்று!


Gokul Krishnan
ஜூலை 26, 2025 09:19

நாளைக்கே இந்த கணக்கு கேட்ட சி ஏ ஐ அதிகாரி உடம்பு சரி இல்லை என்று கூறி உடனடி ராஜினாமா செய்ய வைக்கப்படுவார்


Padmasridharan
ஜூலை 26, 2025 08:09

பல அரசியல்வாதிங்க கொடியேந்தி வாய்ச்சண்டை போட்டு ஜெயிக்கிறதே இந்த கோடிகளுக்காகத்தானே சாமி. மக்கள குடிக்காரனாவே வெச்சிக்கிட்டு போதைல தள்ளாட வெச்சிக்கிட்டு இருப்பாங்க.


S.L.Narasimman
ஜூலை 26, 2025 07:46

பீசேபி ஆளுகிற மாநிலத்திலும் 70000 கோடி ஊழலா. அண்ணாமல மாதிரி ஒரு ஆள் அங்கு தேவை. ஏன் அண்ணாமலயை அங்கு கவர்னரா போடலாம்.


Jack
ஜூலை 26, 2025 08:32

ருசிச்சு ரசிச்சு எழுதின கருத்து


Nagendran,Erode
ஜூலை 26, 2025 14:42

அப்படின்னா நல்லா கலக்கி குடி...


SUBBU,MADURAI
ஜூலை 26, 2025 07:07

இந்த சி.ஏ.ஜி எல்லாம் தமிழ்நாட்டின் பக்கம் தலையை வைத்துக் கூட படுக்க மாட்டான்கள் ஏனென்றால் இங்குள்ள திருட்டு திராவிட மாடல் திமுக அரசின் மீதுள்ள பயம். என்னதான் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு திமுவினரின் திருட்டுக் கணக்கு வழக்குகளை கண்டுபிடித்தாலும் இங்குள்ள காவல்துறையும், நீதிமன்றங்களும் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதனால் எதற்கு தேவையில்லாமல் எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டும் என நினைத்து அவர்கள் தமிழகம் பக்கம் தலைகாட்டுவது இல்லை.


Jack
ஜூலை 26, 2025 08:34

மத்திய அரசு கவிழும் சூழல் ஏற்பட்டால் திராவிடம் தாங்கி பிடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு தான்


முக்கிய வீடியோ