உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றால் சம்பளப்பணம் எங்கிருந்து வரும்; தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றால் சம்பளப்பணம் எங்கிருந்து வரும்; தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருந்து வரும், கணிதம் தெரியுமா? என தேஜஸ்வி யாதவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.பீஹாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காது. காங்கிரசும், ஆர்ஜேடியும் ஜாதி, மதம் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கின்றன. இந்தத் தேர்தல் நல்லாட்சிக்கும், காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கும் இடையிலான போராட்டம். பீஹாரை ஜாதி மோதல்கள் மற்றும் படுகொலைகளின் சகாப்தத்தில் தள்ளிய ஆர்ஜேடி ஓட்டுகளுக்காக மக்களை தேடுகிறது. இதுபோன்ற சக்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக இண்டி கூட்டணி பொய் சொல்கிறது. அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுக்க பணம் எங்கிருந்து வரும்? தேஜஸ்விக்கு கணிதம் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவை வெறும் பொய்கள். பீஹாரை மேலும் மேம்படுத்துவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே சிந்திக்க முடியும். 'காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு' அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2047ம் ஆண்டுக்குள் அதை பணக்கார நாடாக மாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. பீஹாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

pakalavan
நவ 09, 2025 21:24

15 லட்சம் தர்றேன்னு மோடி சொன்னாரே ? நீங்க எங்க போனீங்க ?


Thirumal s S
நவ 09, 2025 20:28

நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. எவ்வளவு பெரிய பொய் இது ராஜ்நாத்?


Thirumal s S
நவ 09, 2025 20:26

உங்கள் தலைவர் சொன்ன இரண்டு கோடி வேலை வாய்ப்பில் இருந்து கற்றது.


பேசும் தமிழன்
நவ 09, 2025 20:02

லாலு குடும்பம் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் பணத்தில் இருந்து கொடுத்தாலும் கொடுப்பார்கள்.


Barakat Ali
நவ 09, 2025 19:29

இரண்டு கோடிப்பேருக்கு வேலை ....... இதை எப்படி நிறைவேறும் ????


முருகன்
நவ 09, 2025 19:13

அது அவர்களின் வாக்குறுதி உங்களுக்கு மக்களுக்கு செய்வது என்றால் பிடிக்காது


Kumar Kumzi
நவ 09, 2025 18:00

எங்க துண்டுசீட்டு கோமாளியும் குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலைனு சொல்லி தானே வெற்றி பெற்றார் கொத்தடிமைகளுக்கு ஓவா குடுத்தா ஓட்டு போடுவானுங்கனு அப்பாவுக்கு அதீத நம்பிக்கை ஹீஹீஹீ


KOVAIKARAN
நவ 09, 2025 17:49

ஸ்டாலின் தான் எனக்குப் பிடித்த முதலமைச்சர் என்று தம்பட்டம் அடித்தவர்தானே ஊழல் மன்னனின் மகனான இந்த தேஜஸ்வி. திமுகவைப் போல பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார் போலும். பாவம், பிஹார் மக்கள் தமிழக மக்களைப்போல ஓசிக்கும், சாராயத்திற்கும், ஓசி பிரியாணிக்கும், 200 ரூபாய்க்கும் ஒட்டு போடுபவர்கள் அல்ல என்று அறியமாட்டார் போலும்.


சோழநாடன்
நவ 09, 2025 17:46

எதிரி நாடுகளை அழிக்க கோடிக்கணக்கில் ஒன்றிய அரசுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றால் ஒன்றிய வரவு செலவு அறிக்கையின் வழியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அப்படியே பீகாரில் அரசு வேலைவாய்ப்புக் கொடுக்கப்பதற்கான நிதியை மாநில அரசு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அதற்கான மக்களிடம் வரி வசூல் செய்யும். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? என்ற கேள்விதான் மனதில் எழுகிறது.


GUNA SEKARAN
நவ 09, 2025 20:34

பிஹாரில் இருப்பதே முப்பது லட்சம் அரசு ஊழியர்கள் தான். 2.97 கோடி புதிய அரசு வேலைகள் என்றால் எப்படி. என்ன வேலை தருவார்கள். 20000 ருபாய் என்றாலும் மாதம் 40000 கோடி ருபாய் வேண்டும்.


Kannan Chandran
நவ 09, 2025 17:35

வீட்டு சமையலறையை அரசாங்கம் என பெயர் மாற்றுவார்கள், பின்னர் வீட்டில் ஒருவர் அல்லது இருவர் அரசாங்க வேலை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும்..


முக்கிய வீடியோ