உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா Vs பாகிஸ்தான்: யாரின் விமானப்படை சக்தி வாய்ந்தது? ஓர் அலசல்

இந்தியா Vs பாகிஸ்தான்: யாரின் விமானப்படை சக்தி வாய்ந்தது? ஓர் அலசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் சம்பவத்தின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் விமானப்படைகள் எந்த அளவுக்கு சக்திவாய்ந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் சுவடுகள். மரண ஓலங்கள் இன்னமும் யார் மனதையும் விட்டு அகலவில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு திபெத், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள் மட்டும் அல்லாது உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.தாக்குதலின் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான் என்று கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தை அந்நாடு மறுத்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ராஜாங்க ரீதியிலான மற்றும் பொருளாதாரம் தொடர்புடைய நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தி உள்ளது. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதே அதற்கு தக்க சான்று. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை அந்தந்த மாநில அரசுகள் வெளியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிப்பையும் அதிரடி நடவடிக்கைகளின் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, தம் பங்குக்கு முண்டாசு தட்ட ஆரம்பித்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே சார்க் விசா திட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு, வர்த்தகமும் நிறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் தமது ராணுவத்தையும், விமானப்படையும் மிகுந்த எச்சரிக்கையுடன் தயார்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. போர் மேகங்கள் சூழலாம், பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தரப்பிலான நடவடிக்கைகள் பாயும் என்று பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், இவ்விரு நாடுகள் இடையேயான ராணுவ வலிமை எப்படிப்பட்ட ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என்பதை இங்கே காணலாம்.அந்த வகையில் இந்திய விமானப்படையின் வலிமை பாகிஸ்தானை விட எட்டிபார்க்க முடியாத தொலைவை கடந்துள்ளது எனலாம்.அவற்றில் முக்கியமானவை;* இந்தியாவிடம் மொத்தமாக 513 போர் விமானங்கள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானிடம் இருப்பதோ 328 தான். * இந்தியாவிடம் 36 ரபேல் போர் விமானங்கள் கைவசம் உள்ளன. இந்த வகை விமானங்கள் மணிக்கு 2200 கி.மீ., வேகத்தில் பாயும். 3700 கி.மீ., தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்.* ரபேல் போர் விமானங்கள் 16 டன் வரை குண்டுகள், ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. 60,000 அடி உயரத்தில் இருந்து இவற்றை இயக்க முடியும்.ஆனால், பாகிஸ்தானிடம் இந்தியாவின் ரபேல் விமானங்களை நேரடியாக எதிர்கொள்ளும் வலிமை இல்லை எனலாம். அந்நாட்டிடம் எப் 16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. திறமையான விமானங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் ரபேல் விமானத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட ஒப்பிட்டு பார்க்க முடியாது.விமானப்படைகளின் வலிமையில் இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கையில், பாகிஸ்தான் எங்கோ பின்னோக்கி இருக்கும் அதே தருணத்தில் தரைப்படை அமைப்பிலும் இந்தியா மிக பெரிய ஆளுமையுடன் காணப்படுகிறது. பாகிஸ்தானில் 6 லட்சம் போர்வீரர்கள் உள்ளனர். இந்தியாவில் 13 லட்சம் போர் வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவிடம் இருக்கும் ராணுவ டாங்கிகளின் எண்ணிக்கை 4200 ஆகும். பாகிஸ்தானிடம் 2600 டாங்கிகளே உள்ளன.ஏவுகணைகளுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் பிரம்மோஸ்(5000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன்), அக்னி, ராம்பேஜ் ஏவுகணைகள் இருக்கின்றன. இதில் ராம்பேஜ் ஏவுகணையில் நுணுக்கமான சென்சார் வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 250 கி.மீ., தொலைவுக்கு அப்பால் இருக்கும் இலக்குகளை துல்லியமாக துவம்சம் செய்யும் திறன் கொண்டவை. ஜாகுவார், மிக் 29, சுகோய் 30 ஆகிய போர் விமானங்களில் ராம்பேஜ் ஏவுகணைகளை பொருத்த முடியும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 35 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட போபர்ஸ் துப்பாக்கிகள் இந்தியாவிடம் உள்ளன. இதற்கு நேர் எதிராக ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் இருந்தாலும் அவை குறுகிய தூரத்தில் உள்ள இலக்குகளை மட்டுமே தாக்கும் திறன் கொண்டவை.தரைப்படை, விமானப்படையைத் தொடர்ந்து, கடற்படையிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவிடம் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானிடம் ஒன்றுகூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.நீர்மூழ்கி கப்பல்கள் எண்ணிக்கையிலும் இந்தியாவுக்கு முன்னிலை. இந்தியாவிடம் இருப்பது 18 நீர்மூழ்கி கப்பல்கள். பாகிஸ்தானிடம் வெறும் 8 நீர்மூழ்கி கப்பல்களே இருக்கின்றன. அணுகுண்டுகளில் இந்தியாவிடம் இருப்பது 172. பாகிஸ்தானிடம் 170 உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R.Neelamegam
ஏப் 26, 2025 08:54

At this time this kind of news column is unnecessary..we have to avoid such things.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 25, 2025 23:28

இந்தியாவில் பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், தெலங்கானா [ஹைதராபாத்] உள்ளிட்ட ஐந்தாம்படை இருப்பது பாகிஸ்தானுக்கு ஆறுதலான விஷயம் ....


sasikumaren
ஏப் 25, 2025 23:19

இந்த போர் சூழலை தவிர்க்க தருணம் பக்கியிடம் தான் இருக்கிறது எந்த குற்றவாளிகள் சுட்டு கொன்றார்களோ அந்த கொலைகாரர்களோ அந்த கயவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தினார் நிச்சயம் இந்திய போரை தவிர்க்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 25, 2025 22:26

நிறைய பத்திரிகைகள் இதைப்போல கம்பேர் பண்றீங்க .... நாம முழு அளவிலான போருக்குத் தயாரா இருந்தாலும் அவங்க தயாரா இல்ல .... இதை யாரும் யோசிக்க மாட்டேன்றாங்க .... சீனாவும் உதவிக்கு வரத் தயாரா இல்ல ... யுத்த களத்தில் அனுபவம் இல்லாத சீனா வந்தா அவங்களுக்கும் பேரிழப்பு இருக்கும் .... பாகிஸ்தானில் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தும் காட்சி அரங்கேறலாம் ... பொறுங்கள் ... பார்த்து ரசிப்போம் ....


GSR
ஏப் 25, 2025 22:12

போரில் ஆயுதங்களை விட வியூகம் தான் முக்கியம் என்பது ஒவ்வொரு தளபதிக்கும் தெரியும், ஒவ்வொரு போரிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. கார்கில் போரில் கூட பாகிஸ்தான் அவர்களுக்கு சாதகமான நிலையிலும் நாம் நமக்கு பாதகமான நிலையிலும் இருந்தும், நாம் வெற்றி பெற காரணம் வியூகம் strategy


ديفيد رافائيل
ஏப் 25, 2025 21:53

என்ன இருந்து என்ன பிரயோஜனம்.... இப்ப வரைக்கும் பதில் தாக்குதல் இல்லையே


Chanakyan
ஏப் 25, 2025 21:28

ஆயுதங்களை விடுங்கள். பொருளாதாரத்தில் ஒப்பிட்டால் கோடீஸ்வரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் உள்ள வித்தியாசம். போரினால் அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் ஒரு மூர்க்கமான பிச்சைக்காரனிடம் மோத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


RAMAKRISHNAN NATESAN
ஏப் 25, 2025 21:24

பாகிஸ்தான் சண்டைக்கு வந்து மூக்குடைபடுவதை விட அணுகுண்டை வித்து பசியாறலாம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை