உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு குறைந்தும் டில்லியில் காற்று மாசு குறையவில்லை

பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு குறைந்தும் டில்லியில் காற்று மாசு குறையவில்லை

சண்டிகர், பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள், முந்தைய ஆண்டைவிட, 50 சதவீதம் குறைந்தபோதும், டில்லியில் காற்று மாசு மிகவும் தீவிரமான நிலையிலேயே உள்ளது.டில்லியில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் துவங்குவதற்கு முன், காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில், பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.இந்நிலையில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ள பஞ்சாபில், இந்த ஆண்டில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள், 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.பஞ்சாப் அரசின் தகவலின்படி, இந்தாண்டு, செப்., 15 முதல் அக்., 27 வரையிலான காலத்தில், 1,995 பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நடந்தன. அதே நேரத்தில் முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 4,059 சம்பவங்கள் நடந்தன.கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 75 சதவீதம் குறைந்துள்ளது. அந்தாண்டின், இதே காலகட்டத்தில், 8,147 சம்பவங்கள் நடந்தன.மொத்தம், 31 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் இந்த காலக்கட்டத்தில் அறுவடை நடக்கும். இந்த நேரத்தில், 200 லட்சம் டன் அளவுக்கு பயிர் கழிவுகள் உருவாவதாக கூறப்படுகிறது. அடுத்து துவங்கும் ராபி பருவத்துக்கு குறைந்த அவகாசமே இருப்பதால், விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு பயிர்க்கழிவு எரிப்பு சம்பவம், 50 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும், டில்லியில், காற்று மாசு தொடர்ந்து மிகவும் தீவிரம் என்ற நிலையிலேயே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை