உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் தங்கவயலில் விற்பனை

வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் தங்கவயலில் விற்பனை

தங்கவயல்: தமிழகத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரோடமைன் -பி ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி கண்டுபிடிக்க முடியாத சில ரசாயன வகைகளும் கலந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் கர்நாடகாவிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முறையாக கர்நாடக அரசு தடை விதிக்க வேண்டும் என்று அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக தங்கவயல், பெங்களூரு உட்பட கர்நாடகாவில் மூன்று நாட்களாக பஞ்சு மிட்டாய் விற்பனை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தங்கவயலில் நேற்று காலை முதல் வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் விற்பனை துவங்கியுள்ளது.'நிறம் சேர்க்கப்படாத பஞ்சு மிட்டாயில் ஆபத்து எதுவும் இல்லை. ஆபத்து இருந்தால் அரசு தடை விதிக்கட்டும். இந்த தொழிலை விட்டுவிடுகிறேன்' என, குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகிறார்.வெள்ளை பஞ்சு மிட்டாயை, தங்கவயலின் ராபர்ட்சன் பேட்டையில் தயாரித்து, தங்கவயல் நகரில் பல இடங்களிலும், பங்கார் பேட்டை, கோலார், மாலூர், முல்பாகல், ஒயிட் பீல்டு வரை விற்பனை செய்து வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, 25 பேர் ராபர்ட்சன் பேட்டையில் தங்கி உள்ளனர்.

21.2.2024 / ஜெயசீலன்

22_DMR_0001வெள்ளை நிறத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை. இடம்: தங்கவயல்.*****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி