உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யார் யார்? வெளியானது பட்டியல்!

இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யார் யார்? வெளியானது பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மே 7ம் தேதி இந்திய பாதுகாப்பு படையினர் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.1. தாக்குதலில் பயங்கரவாதி ஹபீஸ் முகமது ஜமீல் கொல்லப்பட்டான். இவனுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்துள்ளது. இவர் மவுலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pao5b0v7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் முகமது யூசுப் அசார். இவன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன். மசூத் அசாரின் மைத்துனர். ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டார். ஐசி-814 விமானக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவன்.3. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் முகமது ஹசன் கான். இவன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன். காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதி திட்டங்களை தீட்டி கொடுத்தவன். பயங்கரவாதி முப்தி அஸ்கர் கானின் மகன்.4. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் காலித். ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவன். இவனது இறுதிச் சடங்கில், மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை கமிஷனர் கலந்து கொண்டனர்.5. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் அபு ஜுண்டால். இவன் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் பொறுப்பாளார். இவனது இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Dharmavaan
மே 10, 2025 19:50

வெறும் 4 பேர் தானா


India our pride
மே 10, 2025 18:59

உங்களை வேரோடு ஒழிப்பேன் என்று சொல்லும் ஒரு மத வெறி கொண்ட நாட்டொடு எப்படி சமாதானம் பேச முடியும்? பாகிஸ்தானிடம் கை ஓங்கி இருந்த நிலையில் அடிபட்ட எதிரியின் கையை உடைப்பதுதான் அரசாங்கத்தின் புத்திசாலித்தனமாக செயலாக இருக்கும். அது அடுத்த 50 ஆண்டுகள் பாகிஸ்தானை எழுந்து நடக்காமல் செய்வது தான்.


Sarashan
மே 10, 2025 18:55

24.04.2025 அன்று, பஞ்சாப் மாநிலம் பெரோஜ்பூர் அருகே, சர்வதேச எல்லையை கடந்து, பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற நமது இந்திய பி.எஸ்.எப். வீரரின் கதி என்ன?


spr
மே 10, 2025 18:37

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடந்தது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் பேசுவீர் . ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே. குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட . காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .கத்தி நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் எழுதிய பாடல் வரிகள் கலைஞர் பாணியில் சற்று மாற்றப்படியிருக்கிறது. இப்படிப் பெற்ற சுதந்திரத்தை நாம்தான் பேணி காக்க வேண்டும். தேவையின்றி பேசும் வீணர்களை புறக்கணித்து மேலே செல்வோம் இந்தியா பாகிஸ்தான் மக்களுக்கோ இஸ்லாமிய மதத்திற்கோ எதிரானதல்ல பயங்கவாதம் எந்த வகையிலும் இந்த மண்ணில் அனுமதிக்கப்படக் கூடாது என்று உலகுக்கு உரத்த குரலில் சொல்லுவோம் இதனைச் சாதித்த மோடி அரசைப் பாராட்டுவோம். நடத்திய அனைத்து வீரர்கள் பணியாளர்கள் துணை நின்றவர்களையும் பாராட்டுவோம்.


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 16:06

எங்களுக்கு தேவை என்ன ? பன்றிஸ்தானின் தளபதிகள் உயிரோட இந்திய ராணுவத்திடம் பிடிபட்டாகணும் ..... குறைந்த பட்சம் எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளின் உயிர் வேணும் ....


K.Uthirapathi
மே 10, 2025 15:36

பத்தில், பத்தில், பத்தல. பன்றிஸ்தான் முகத்துல பயத்த, பார்க்க முடியல. தற்காப்பு அமைப்புக்கள் சரியில்லை. காஷ்மீரில் அரசு அதிகாரி கொல்லப் பட்டுள்ளார், குடியிருப்புகள் பகுதி தாக்கப்பட்டு, சேதமடைந்துள்ளது. வீண் தம்பட்டம் அடிக்க வேண்டாம்.


V K
மே 10, 2025 15:56

நீ போய் நில்லு போ


Kumar Kumzi
மே 10, 2025 16:13

நீ தான்டா திராவிஷத்தின் சிறந்த கொத்தடிமை


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 17:00

பன்றிஸ்தானுக்கு அடிமைகளை இந்தியாவில் ஏன் வெச்சிருக்கணும் ?


K V Ramadoss
மே 10, 2025 19:51

வீண் பிதற்றல் வேண்டாம்.


mohan
மே 10, 2025 21:15

அப்படியே நீங்கள் பாகிஸ்தானுக்கு ஒரு டூர் சென்று பார்த்து வரவும்..


Nitin Daman
மே 10, 2025 14:56

Congratulations to our Indian Army. we are with you. Am proud of INDIAN


mei
மே 10, 2025 14:55

பத்தல பத்தல


புதிய வீடியோ