உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடிகாலை அழகுபடுத்தியது யார்? டி.டி.ஏ. - ஆம் ஆத்மிக்குள் சர்ச்சை

வடிகாலை அழகுபடுத்தியது யார்? டி.டி.ஏ. - ஆம் ஆத்மிக்குள் சர்ச்சை

புதுடில்லி:'துவாரகா வடிகால் பகுதியை அழகுபடுத்தியது டில்லி அரசு அல்ல' என டில்லி மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.துவாரகாவில் அழகுபடுத்தப்பட்ட வடிகாலின் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி, 'முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவுப்படி டில்லி அரசுதான் இந்த வாய்க்கால் பகுதியை அழகுபடுத்தியது' என கூறப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்துள்ள டில்லி மேம்பாட்டு ஆணையம், 'துவாரகா வடிகால் பகுதியை அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவுப்படி டில்லி அரசு அழகுபடுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி கூறியிருப்பது முற்றிலும் தவறு. இந்தப் பணியை துணைநிலை கவர்னர் தலைமையிலான டில்லி மேம்பாட்டு ஆணையம்தான் செய்தது. அழகுபடுத்தப்பட்ட கால்வாயை கவர்னர் சக்சேனா பிப்ரவரியில் திறந்து வைத்தார். இது மட்டுமின்றி மாநகரின் பல இடங்களில் வளர்ச்சிப் பணிகளை ஆணையம் செய்து வருகிறது' என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ