உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்: அமித்ஷா கேள்வி

சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்: அமித்ஷா கேள்வி

புதுடில்லி: '' பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? பாகிஸ்தானையா? லஷ்கர் இ தொய்பா அமைப்பையா? அல்லது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையா? '' என ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

என்ன காரணம்

ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது: திங்கட்கிழமை, நமது பாதுகாப்பு படைகள் 'ஆபரேஷன் மகாதேவ்' நடத்தி, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதற்காக பலரும் எனக்கு செய்தி அனுப்பி வருகின்றனர். நேற்று காங்கிரஸ் பேசும் போது, பயங்கரவாதிகளை நேற்றைய தினம் கொன்றது ஏன் என கேள்வி எழுப்பியது. அவர்களை நேற்று ஏன் கொல்லக்கூடாது. ராகுல் நேற்று பேசுவதாக இருந்ததே காரணமா?

பயங்கரவாதத்தை ஒழிப்போம்

தேசிய பாதுகாப்புக்கும், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அரசியல், ஓட்டு வங்கி அரசியல் மற்றும் திருப்திபடுத்தும் அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இதனை மக்கள் பார்த்து வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்தை இந்த அவையில் உறுதி அளிக்கிறேன். இது தான் மோடி அரசின் தீர்மானம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்.

தாக்குதல்

என்னை ராஜினாமா செய்யச் சொல்லும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்புகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரங்கள் குறித்து தொடர்ந்து அவர் சந்தேகம் எழுப்புகிறார். யாரை அவர் பாதுகாக்க விரும்புகிறார் என கேள்வி எழுப்ப விரும்புகிறேன். பாகிஸ்தானையா? லஷ்கர் இ தொய்பாவையா? அல்லது பயங்கரவாதிகளையா ? அவருக்கு வெட்கமாக இல்லையா? கடவுளின் கருணையால், அவர் கேள்வி எழுப்பிய தினமன்று மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், பயிற்சி தளங்கள், பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதனை தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக பாகிஸ்தான் கருதியது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்தியாவில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 9 ம் தேதி பாகிஸ்தானின் 11 பாதுகாப்பு தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து பின்வாங்கியது.

காங்கிரசால்

முன்பு பாகிஸ்தானிடம் நாம் ஆதாரங்களை மட்டும் வழங்கி வந்தோம். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு விமான தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. பயங்கரவாதம் குறித்து பாஜவை நோக்கி கேள்வி எழுப்ப காங்கிரசுக்கு உரிமை கிடையாது. காங்கிரசின் ஓட்டுவங்கி மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் காரணமாக, நாட்டில் பயங்கரவாதம் பரவியது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கொடுத்தது காங்கிரஸ். அதனை பாஜ திருப்பி கொண்டு வரும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் சொன்னது இப்போது உண்மையாகிவிட்டது. இன்று பயங்கரவாத பயிற்சி முகாம்கள், தலைமையகங்கள் மற்றும் ஏவுதளங்கள் தூசியாகிவிட்டன. நமது ஆயுதப்படைகளும் அவர்களின் தலைவர்களை அழித்துவிட்டன.பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், நேரு ஆட்சியில் 1960 களில் ஒரு தலைபட்சமாக போடப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவெடுத்தோம். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை துவக்கினோம்.

முழு சுதந்திரம்

ஏப்.,30 ம் தேதி இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். பாதுகாப்பு அமைச்சகமும், ஆயதப்படைகளும் கூட்டாக சேர்ந்து இலக்கு, திட்டம், இடம் மற்றும் தாக்குதலுக்கான நேரத்தை முடிவு செய்தன. நமது வீரர்கள் தாக்குதலை தைரியத்துடன் மேற்கொண்டனர். அவர்களின் வெற்றிக்கு நான் பாராட்டுகிறேன். மே 7 ம் தி பயங்கரவாதிகளின் 9 பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சர் லோக்சபாவில் கூறியது போல் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளில் தலைமயைகம் அழிக்கப்பட்டன. இது மோடி அரசாலும், படைகளின் தைரியத்தினாலும் சாத்தியமானது.

பாக் கெஞ்சல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தீர்க்கமானது இல்லை என சிதம்பரம் சொல்கிறார். அவர் தற்போது இந்த அவையில் இல்லாவிட்டாலும் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன் . 1965மற்றும் 1971 ல் நடந்த போர் தீர்க்கமானதா? ஆமாம் என்றால் பயங்கரவாதம் பரவி வருவது ஏன்? எதிரிகள் பயப்படாத வரையிலும் திருந்தாத வரையிலும், முடிவு தீர்க்கமானதாக இருக்காது. இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவர்கள் பயப்படுவது ஏன்?யாரின் வேண்டுகோளின் பேரிலும் போர் நிறுத்தம் ஏற்பட்டது என கேட்கின்றனர். யாரின் வேண்டுகோளுக்கு ஏற்பவும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. பாகிஸ்தான் தான், நமது நாட்டு ராணுவ டிஜிஎம்ஓவை அழைத்து போரை நிறுத்தும்படி கெஞ்சியது. ஆரம்பம் முதல் நமது நோக்கம் போர் கிடையாது. பாகிஸ்தான் மக்களை துன்புறுத்துவது கிடையாது. பாகிஸ்தான் நிறுத்தினால், நாங்களும் நிறுத்துகிறோம் என்று பிரதமர் மோடி ஆரம்பத்திலேயே கூறினார். ஆனால், ராகுல் பிரச்னையை பெரிதுபடுத்த முயற்சிப்பதுடன் கேள்வி கேட்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

வெளிநடப்பு

இந்த அவையில் விவாதத்துக்கு பிரதமர் மோடி வந்து பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், ' இந்த அவைக்கு வந்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. பார்லிமென்ட் வளாகத்தில் இருந்தும் இந்த அவைக்கு வராதது, ராஜ்யசபாவை அவமானப்படுத்துவது போன்றது என்றார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது: பிரதமர் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். அவர்களின் கவலையை தீர்க்க விரும்புகிறேன். பிரதமர் அலுவலக பணிகளில் தீவிரமாக உள்ளார். என்னால் பதிலளித்து விளக்கம் அளிக்க முடியும் . பிறகு பிரதமர் இங்கு வர வேண்டும் என வலியுறுத்துகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Vijay D Ratnam
ஆக 02, 2025 13:23

சிதம்பரம் போன்ற தீய சக்திகள் இந்த தேசத்தை பிடித்த கிருமி. கிருமியை இனியும் விட்டு வைத்தால் தேசத்தை சீரழிக்கும். திஹார்ல தூக்கி பத்திரமாக வைக்கவேண்டும்.


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 01:26

பயங்கரவாத முகாம்களை அழித்தத்தில் பாகிஸ்தானை விட இவனுகளுக்கு தான் அதிகம் வலிக்குதுன்னா பார்த்துக்கோங்க இவனுக லட்சணத்தை. வாங்கிய காசுக்கு மேலயே கூவுறதை .


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 01:24

இவனுகளின் இத்தாலி ஆட்சியில் தான் எல்லா பயங்கரவாதிகளை ஊக்குவிச்சானுங்க. பொது மக்கள் மட்டுமின்றி எதனை ராணுவத்தினர் கொள்ளபப்பட்டார்கள்? அப்பப்பா? இவனுக்களை பேச விட்டு இதற்கு பதிலும் விளக்கமும் வேறு கொடுக்கணுமாம் .எதற்காக டிமாண்ட் செய்தானுங்க என்றால் இவுங்க எஜமானனுக்கு நாங்க எப்பவும் உங்க பக்கம் தான் அப்படீன்னு மீண்டும் மீண்டும் கன்வின்ஸ் பண்ண தான். எத்தனை கோடிகள் வீண் இப்படி பொன்னான நேரத்தை செலவு செய்து இவனுகளுக்கு பதில் சொல்றத்துக்கு? பாகிஸ்தானில் போய் வெட்கம் இல்லாமல் மோடியை தோற்கடிக்க மணிசங்கரை அனுப்பி உதவி கேட்டவனுவ மணி தானே இவனுக?


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 01:13

நாங்க ஆட்சிய பிடிச்சா 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் செல்லும் என்று அறிவிப்போம் என்றவன். அதாவது இவன் கொடுத்து வைத்திருக்கும் கரன்சி மெஷின் மூலம் பாகிஸ்தானில் ஏற்கனவே அச்சான அந்த நோட்டுக்கள் எதனை லட்சம் கோடியோ, எங்க பதுக்கியிருக்கானோ தெரியாது. இவனெல்லாம் இப்படி தான் பேசுவான், ஜனநாயகத்தில் இவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி உள்ளது. தலை எழுத்து தான் ஆப்படிபீங்கறாங்க


Vijay D Ratnam
ஜூலை 30, 2025 23:03

அமித்ஷா அவர்களே, கூல், கூல். இப்படி பப்பு அண்ட் கோவை இப்படி வெரைட்டி வெரைட்டி வெளுத்தா என்னதான் செய்வார்கள். பாவம் அவர்களும் பொழப்பு நடத்த வேண்டாமா. இதுக்கு மேல போயி உழைத்து சம்பாதித்து உண்ணவேண்டும் என்பது நடக்குற காரியமா. அதனால்தான் இந்திய மக்களால் அது கான்க்ராஸ் மாபியா என்று அன்போடு அழைக்கப்படுகிறது. பாவம் பப்பு. அவிங்கப்பா, பிரதமர், அவிங்க பாட்டி பிரதமர், அவிங்க முப்பாட்டன் பிரதமர். ஆர்டர்படி நாமதானே பிரதமராவோனும். இந்தாளு குஜராத்திலேர்ந்து வந்து டெல்லியில் அசைக்கமுடியாத சக்தியா உருவாயிட்டாரே என்ற வயிற்றிரிச்சல் இருக்கத்தானே செய்யும். இனி வாய்ப்பே ல்லை என்றானதும் வாய்க்கு வந்தபடி பேசறார், பாராளுமன்றத்தில் கெட்டவார்த்தை பேசுகிறார். விடுங்க பாஸ் சூரியனை பார்த்தது சிலதுகள் குரைக்கத்தான் செய்யும். அதனால் சூரியனுக்கு என்ன பிரச்சினை. கத்தி கத்தி கதறி கதறி அடங்கிடும். உங்க மேலயும் வருத்தம் இருக்கு அமித்ஷா அவர்களே. திஹார்ல இருக்கவேண்டிய கேப்மாரிகளைலாம் வெளியே விட்டு வைத்திருக்கீங்க.


சிவம்
ஜூலை 30, 2025 22:40

ஏற்கனவே காப்பாற்றிவிட்டார் அமைச்சரே.பாகிஸ்தான் ஊடகங்களும், யூ டியூபர்களும் மாறி மாறி சிதம்பரத்தின் கேள்வியினை வைத்து விவாதிக்க ஆரம்பித்து விட்டது. பாருங்கள் இந்தியா தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் நடத்திய பெஹெல்காம் தாக்குதல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று பொய்யாக குற்றம் சுமத்தி போர் செய்து எங்கள் நாட்டின் அப்பாவிகளை கொன்று விட்டது என்று புலம்புகின்றது. காரணம் இந்த முன்னாள் உள் துறை அமைச்சர். இவரது செயல் இந்தியாவுக்கு தலை குனிவு. தமிழகத்திற்கு அதை விட பெரிய தலை குனிவு.


M Ramachandran
ஜூலை 30, 2025 22:12

மனநிலை எப்போது வேண்டுமாலும் மாறும். தேர்ந்தெடுத்த மக்களை சொல்ல வேண்டும்.


M Ramachandran
ஜூலை 30, 2025 22:07

ED ரெய்டுக்கு பயந்து ஓடி ஒளிந்துகொண்ட ஆசாமி ப.சிதம்பரம் அவர்கள். பதவியில் இருந்த போதும் நடவடிக்கையையெடுத்தால் தீவிரவாதிகள் தன்னை குறி வைப்பார்களேயென்ற பயம். அதனால் தான் பாகிஸ்தான் ராணுவத்தாருடன் நட்பு பாராட்டி அவர்களுடன் கை கோர்த்து ,அவர்கள் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஏற்காவி விட்டால் யாரோ கொள்ள படுவதற்கு நாம் ஏன் கவலைய கொள்ள வேண்டும் நம் தலை தப்பினால் போனதும் என்று இருந்தார். பழக்க தோசத்தால் அவருக்கு கவலை வந்து பேசுகிறார். பொது கூட்டத்தில் பேசினால் காலடி விழும் என்பது தெரிந்து தன் உயிருக்கு உத்திரவாதம் இருக்கு மிடமாக பார்த்து பேத்துகிறார்.


Tamilan
ஜூலை 30, 2025 21:35

நாட்டை. அம்பானி அதானி போன்ற முதலைகளை அல்ல


அதிரடி
ஜூலை 30, 2025 21:33

இவருக்கு எப்பொழுதும் பாகிஸ்தான் மீது அதிக பிரியம் உண்டு


சமீபத்திய செய்தி