உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? பட்டியலில் முக்கிய பிரபலங்கள்

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? பட்டியலில் முக்கிய பிரபலங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி தேர்வு பட்டியலில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜக்தீப் தன்கர் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு ஆக.10ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிய இருந்தது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2nxbyxmm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடல்நிலையை காரணம் காட்டி தமது பதவியை தன்கர் ராஜினாமா செய்வதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 10ம் தேதி பல்கலை. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தன்கர், 2027ம் ஆண்டு வரை பதவியில் இருக்க போவதாகவும், அதன் பின்னர் ஓய்வு என்பது சரியாக இருக்கும் என்றும் கூறி இருந்தார்.பார்லி. கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கும் இத்தருணத்தில் அவரது ராஜினாமா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த பட்டியலில் தற்போது பலரின் பெயர்கள் அடிபடத் தொடங்கி இருக்கின்றன. அவர்களில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பெயர் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். சட்டசபை தேர்தலில் உ.பி.,யில் அதிக தொகுதிகளில் பா.ஜ., வென்ற தருணத்தில் மனோஜ் சின்ஹா, அம்மாநிலத்தின் முதல்வராகக்கூடும் என்று பேசப்பட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் முதல்வரானார். ஜூலை 17ம் தேதி அவர் பிரதமரை 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். மேலும், ஸ்ரீநகரில் ஒரு விழாவின் போது சின்ஹா, தமது செல்போனில் பேசிக் கொண்டே மகிழ்ச்சியுடன் இருக்கும் படம் வைரலானது. மனோஜ் சின்ஹாவை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நட்டா பெயர் பட்டியலில் இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக, பீஹார் கவர்னர் ஆரிப் முகமதுகான், ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.துணை ஜனாதிபதி எப்படி தேர்ந்து எடுக்கப்படுகிறார் என்பதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன. இவர் பார்லி.யின் இரு அவைகளின் உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழுவால் தேர்ந்து எடுக்கப்டுகிறார். இரு அவைகளின் எம்.பி.,க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம், ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையில் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

JEE
ஜூலை 23, 2025 08:05

மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள், கட்சிக்காக ஓட்டு போட்டு, பெரும்பாலும் ...களையே தேர்ந்து எடுக்கிறார்கள்


spr
ஜூலை 22, 2025 18:07

அநேகமாக பீஹார் கவர்னர் ஆரிப் முகமதுகான், அல்லது ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் இவர்களுக்கே வாய்ப்பு. பாஜக கண்டெடுத்த அண்மைக்கால கதாநாயகன் திரு தரூர் கூட வாய்ப்புள்ளவர்தான் என்றாலும், அடுத்து வரப்போகும் பல முக்கியமான மசோதாக்களில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையென்பதால் திரு கலாம் போல ஒரு சிறுபான்மையினத் தலைவர் பாஜகவுக்குத் தேவை. திரு குலாம் நபி தேர்வானால், காங்கிரசுக்கு மற்றுமொரு ஆப்பு வைத்தாற்போல.


Krishnamurthy Venkatesan
ஜூலை 22, 2025 14:11

எனது choice the young and dynamic youth ANNAMALAIJI.


T.S.Murali
ஜூலை 22, 2025 15:36

உன் எண்ணத்திலே தீ வைக்க. சாதாரண கவுன்சிலருக்கே லாயக்கி இல்லை. இதுல துணை ஜனாதிபதி பதவியா. அதிலும் ஒரு விஷயம் உள்ளது. பதவி காலம் முடிந்தவுடன் அப்படியே வீட்டுக்கு அனுப்பிவிடலாம்


Anand
ஜூலை 22, 2025 15:59

சாதாரண கவுன்சிலருக்கு கூட லாயக்கில்லாதவர்கள் யாரென்றால் தீயசக்தி மற்றும் இத்தாலி மாபியா குடும்பத்தினர்....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 22, 2025 17:00

அதாவது மக்கள் செல்வாக்கு இல்லாம புறவாசல் வழியா அவ்ளோ பெரிய பதவியில் உட்காரவைக்க இவர் என்ன நிர்மலா சீதாராமனா இல்ல ஜெய்ஷ்ங்கரா ??? உங்களுக்கு எல்லாம் பேராசை தான் ... அது பெருநஷ்டத்தில் தான் முடியும்


Kulandai kannan
ஜூலை 22, 2025 13:18

காங்கிரஸ் காற்றே படாதவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தன்கட் ஒரு முன்னாள் காங்கிரஸ்காரர்.


உண்மை கசக்கும்
ஜூலை 22, 2025 11:29

இவர் நடப்பது போல் கிண்டல் செய்த ஒரு உறுப்பினரின் நடிப்பை கை கொட்டி ரசித்து வீடியோ எடுத்த ராகுல்காந்தி குஷியாகிடுவார்.


R kabirdass
ஜூலை 22, 2025 10:20

கருணாகரன் IPS


R kabirdass
ஜூலை 22, 2025 10:19

Karanakatan IPS


உண்மை கசக்கும்
ஜூலை 22, 2025 09:48

ராகுல் காந்தி துணை குடியரசு தலைவராக வந்தால் சிறப்பாக இருக்கும். யோசியுங்கள். சிரிக்க வேண்டாம்.


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 22, 2025 09:35

ஒருகால் கமல் வரார் நு அவரு ராஜினாமா பண்ணிட்டரோ


VSMani
ஜூலை 22, 2025 11:14

ஒருக்கால் இரண்டு காலில் கமல் வரலாம் என்று முக்கால் யோசித்து நாலுகால் துணை ஜனாதிபதி நாற்காலி வேண்டாம் என்றிருப்பாரோ?


Sathish Kannan
ஜூலை 22, 2025 13:08

unmai


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 22, 2025 09:28

பின்னாடி என்னவோ நடந்திருக்கிறது ...74 வயது தான் ...இன்னும் 75 ஆகவில்லை அதுவும் இவர் பதவி வெறி பிடித்தவர்.10 நாட்களுக்கு முன்னாடி தான் 2027 பிறகு தான் ஓய்வு என்று சொல்லியவர்.. 75 வயது கூடிய சீக்கிரம் ஆகப்போகிறவர்களை RSS எப்படி கையாளும்? இதுக்கு அப்புறம் வேறு என்னவோ பெரிதாக நடக்கபோகுது. அதற்க்கு முன்னோட்டமா இது? ஒரு பெரிய கவலை... மீனா அரசியல் வாழ்க்கை என்னாகும்?? bj கட்சிக்கு வேறு வழி எதாவது இருக்கா ???


VSMani
ஜூலை 22, 2025 11:10

...துணை ஜனாதிபதி வாய்ப்புக்கிடைக்குமோ ?


vivek
ஜூலை 22, 2025 16:41

அந்த அப்போலோ அட்மிட் ரகசியம் தானே சிகண்டி அறிவு கிண்டி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை