உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாவை தயாரித்தது யார்? அதிரடி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

மசோதாவை தயாரித்தது யார்? அதிரடி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எதிர்க்கட்சி துணை தலைவரான காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் பேசியதாவது:

இந்த மசோதா, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. மதம் சார்ந்த விஷயங்களில், அரசு தலையிடுவதை இது உறுதி செய்கிறது. இந்த மசோதாவை, சிறுபான்மையினர் நலத்துறை தான் தயாரித்ததா அல்லது வேறு ஏதாவது துறை தயாரித்து அளித்ததா? எங்கிருந்து இந்த மசோதா வருகிறது? வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்களிடமாவது, நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே மதத்தில் இருந்தீர்களா என, உங்களால் கேட்க முடியுமா? பின் எதற்காக, இந்த மசோதாவில் மட்டும் அவ்வாறு கேட்கப்படுகிறது? மத விஷயங்களில், இந்த அரசு தலையிட வேண்டிய அவசியம் என்ன? அரசியலமைப்பு சட்டத்தை, இந்த மசோதா வாயிலாக அரசு நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. இரண்டாவதாக, சிறுபான்மை சமூகத்தை அவமதிப்பு செய்துள்ளது. மூன்றாவதாக, இந்திய சமூகத்தை பிளவுபடுத்தியுள்ளது. ஐ.மு., கூட்டணி அரசின் மீது, அமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தும் தவறானவை. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவர் அளிக்க வேண்டும். உ.பி.,யில் ஆளும் பா.ஜ., அரசு, சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த கூட அனுமதி தரவில்லை. இந்த மனநிலையில் இருக்கும் நீங்கள், முஸ்லிம்கள் மீது இரக்கப்படுவதாக கூறுவதை எப்படி நம்புவது? பா.ஜ.,வில் சிறுபான்மை சமூகங்களிலிருந்து எத்தனை பேர் எம்.பி.,க்களாக இருக்கின்றனர்? வக்ப் மசோதா வாயிலாக, ஒரு சமூகத்தின் மீது இந்த அரசு குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதே நிலைமை, நாளைக்கு வேறு ஒரு சமூகத்திற்கும் நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு கோகோய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஏப் 03, 2025 11:39

வக்ஃபு மசோதாவை லோக்சபாவில் அறிமுகப்படுத்திய சிறுபான்மை நல அமைச்சர் கிரண் ரிஜுஜு ஒரு புத்த சமயத்தவர். எவ்வளவோ முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பிஜெபி யில் உள்ளனர். சென்ற முறை அல்பொன்ஸ் கண்ணன்தனம் என்ற கிறிஸ்தவர் மத்திய அமைச்சராக இருந்தார். பிஜெபி யின் முதல் பொதுச்செயலாளர் சிக்கந்தர் பக்த் என்பார்.


J.Isaac
ஏப் 03, 2025 20:29

பச்சோந்திகள்


பேசும் தமிழன்
ஏப் 03, 2025 09:09

இத்தாலி மாஃபியா கும்பலை சேர்ந்த இந்த ஆள் இப்படி தான் பேசுவார்.. ஓட்டுக்காக நாட்டு நலனில் சமரசம் செய்து கொள்ளும் ஆட்கள் இவர்கள்.. நாட்டு நலனில் அக்கறை கொண்ட உண்மையான காங்கிரசுக்கும். இப்போது இருக்கும் இத்தாலி கான் கிராஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... அவர்கள் நாட்டை நேசித்த ஆட்கள்.... ஆனால் இவர்கள் ஜார்ஜ் சோரஸ் போன்ற ஆட்கள் வீசும் பணத்துக்காக.... நாட்டை காட்டி கொடுக்கவும் தயங்காத ஆட்கள்.


குமரன்
ஏப் 03, 2025 07:27

காங்கிரஸ் கிட்டத்தட்ட முஸ்லிம் லீக்காக மாறியது என்றே தோன்றுகிறது


SENTHIL NATHAN
ஏப் 03, 2025 07:16

காஷ்மீரில் இந்துக்கள் தாக்கப்பட்டு விரட்டப்பட போது கேடு கெட்ட காங்ரஸ் என்ன செய்தது? மீரட்டில் ரோட்டில் பிரார்த்தனை செய்ய தடை செய்யாவிடில் பிரார்த்தனை முடிந்த பிறகு கல்வீச்சு செய்வார்கள். நீ போய் நின்று கல்வீச்சு எதிர் கொள்வாயா??


தத்வமசி
ஏப் 03, 2025 06:43

என்னது அதிரடி கேள்வியா ? எலே நாங்க கேட்கணும் காங்கிரஸ் கட்சிய... எத்தனை சட்டங்கள் நீங்கள் பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராக இயற்றி வைத்துள்ளீர்கள் ? ஆண்ட பரம்பரை என்று சொல்லும் நீங்கள் நாட்டை எப்படி ஆண்டீர்கள் என்று இன்று வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிகிறது. நாட்டை ஜாதியால், மதத்தால் பிரித்து வைத்துள்ளீர்கள். காஷ்மீருக்கு, சிக்கீமுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம், முப்பது அ பிரிவு. மதவாரியாக ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம். சிறுபான்மை என்று எந்த நாட்டில் உள்ளது ? மதத்தால் நாட்டை பிரித்துச் சென்ற பிறகு இங்கு என்ன சமரசம் ? பெரும்பான்மை மக்களின் நாடாகவல்லவா அறிவித்து இருக்க வேண்டும் ? எல்லா தில்லாலங்கடி வேலைகளை செய்து விட்டு இப்போது கேள்வி கேட்டுபுட்டால் பெரிய கட்சி என்கிற நினைப்பா ?


sridhar
ஏப் 03, 2025 06:33

உங்க ஆயா


நிக்கோல்தாம்சன்
ஏப் 03, 2025 06:20

சமூக மதசார்பின்மை பற்றி கோகோய் இடம் கேள்வி கேட்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையே இல்லை இதுதான் காங்கிரசின் நிலைப்பாடு , கேட்டால் செல்வப்பெருந்தகை வழியில் maலம் veesapadum?


Kasimani Baskaran
ஏப் 03, 2025 03:46

இவர்களின் கூற்றுப்படி இரக்கப்பட்டால் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம்.


Krishna
ஏப் 03, 2025 02:32

கடைசி வரைக்கும் மதத்த வெச்சி அரசியல் செய்யணும். இதா காங்கிரஸ் ஓட பிழைப்பு. காங்கிரஸ் தமிழக அற நிலைய துறைய என்ன சொல்லும்?


Kumar Kumzi
ஏப் 03, 2025 01:51

இந்திய திருநாட்டை துண்டாட நினைக்கும் கேடுகெட்ட கொங்கிரஸ் கட்சியை உடனடியாக தடை செய்யணும்


A Viswanathan
ஏப் 03, 2025 11:53

உங்களுடைய சொத்தை அவர்கள் தங்களுடையது என்று கூறினால் இவர் விட்டுவிடுவாரா.சில வாக்கிற்காக தங்கள் சொந்த நாட்டை சிறுபாண்மையிரிடம்அடமானம் வைக்க தயங்காதவர்கள்..


J.Isaac
ஏப் 03, 2025 20:31

கொங்கிரஸ் கட்சியா? சங்கி கட்சியா?


சமீபத்திய செய்தி