உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் கடத்துவது யார்? எம்.எல்.ஏ., பேச்சுக்கு எதிர்ப்பு

தங்கம் கடத்துவது யார்? எம்.எல்.ஏ., பேச்சுக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ''மலப்புரம் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்க கடத்தலில் ஈடுபடும் பெரும்பாலானோர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வான கே.டி.ஜலீல் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மலப்புரம் மாவட்டம், கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வாயிலாக, அதிக அளவில் தங்க கடத்தல் நடப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து, தன் வார்த்தைகள் திரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.இந்த பரபரப்பு ஓய்வதற்குள், ஆளுங்கட்சியை சேர்ந்த தாவனுார் எம்.எல்.ஏ.,வான கே.டி.ஜலீல் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வாயிலாக, தங்க கடத்தல், ஹவாலா போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மத பெரியவர்கள் இதை கண்டிக்க வேண்டும்.இல்லையெனில், பிற மதத்தை சேர்ந்தவர்கள் இதை சுட்டிக்காட்டினால், அது முஸ்லிம் சமூகத்தையே இழிவுபடுத்துவதாக அமையும்.தங்க கடத்தல் மத விரோத செயல் என, மத பெரியவர்கள் அறிவிக்க வேண்டும் என்ற கருத்தால், சிலர் வருத்தப்படுவது ஏன் என்பது வியப்பாக உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''இது மிக மோசமான அவதுாறு. இந்த தகவல் அவருக்கு எங்கு கிடைத்தது? எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்,'' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் பி.எம்.ஏ.சலாம் கேள்வி எழுப்பியுள்ளார்.இடதுசாரிகள் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், தங்க கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடிக்க காரணமானவருமான அன்வரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajesh
அக் 08, 2024 01:46

வரவேற்கத்தக்க கருத்து,மத வெறியர்கள் உண்மை ஏற்று கொள்ள மாட்டார்கள். இதுவரை கைதான முஸ்லிம்களின் பெயரை வெளியிட்டால் போதும், சந்தி சிரித்து விடும்


Suppan
அக் 07, 2024 14:45

இதே கருத்தை வேறு சமூகத்தை சேர்ந்தவர் சொல்லி இருந்தால் ,மொத்த இஸ்லாமிய சமூகமே ஜிஹாத் என்று கூப்பாடு போட்டிருக்கும். "சர் தன் சே ஜூதா அதாங்க தலையை வெட்டு என்ற கோஷம் கேட்டிருக்கும்.


Sreedhar Muthalagiri
அக் 07, 2024 14:31

தவறுதான் கடத்தல் செய்பவர்கள் அனைவரும் அமைதி மார்கத்தினர் மட்டுமே. இந்த பெருமை அவர்களுக்கு மட்டுமே சொந்தம். மற்றவர்கள் உரிமை கொண்டாடுவது தவறு தான்.


ஆரூர் ரங்
அக் 07, 2024 11:14

கடத்தல், ஹவாலா தவறு, பாவம் , ஹராம் என புத்தகத்தில் உள்ளதா? நாட்டின் சட்டத்தை விட மதம்தான் முக்கியம் என நினைத்தால் உருப்படுமா?


Dharmavaan
அக் 07, 2024 08:41

எல்லா சட்டம் விரோத நடவடிக்கைகளும் செய்வது பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் இதில் சந்தேகமில்லை


R S BALA
அக் 07, 2024 07:55

சில விஷயங்களை உண்மையாக இருந்தாலும் சொல்லாமல் இருப்பதுதான் நன்று..


B N VISWANATHAN
அக் 07, 2024 07:28

கஸ்டம்ஸ் தேபர்த்மேன்ட் சைட்ல எல்லா விவரமும் கிடைக்கும். இல்லன்னா ஒரு RTI மனு போட்டா முழு தகவல்களையும் பெறலாம்


raja
அக் 07, 2024 07:08

இது தான் மூர்க்கம் .. உண்மையை சொன்னால் ஏன் பொங்க வேண்டும்...இதையே இந்துக்கள் செய்தார்கள் என்று கூறி இருந்தால் இன்று எதிர்க்கும் கட்சிகள் மற்றும் பிரமுகர்கள் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு இருப்பார்கள்...


N.Purushothaman
அக் 07, 2024 06:48

உண்மையைத்தானே சொல்லி இருக்காரு .... தங்கம் கடத்தும் தொழிநுட்பத்தை கண்டுபிடித்தவர்கள் அவர்கள் தான் ...விதவிதமான தங்கக்கடத்தலுக்கு சொந்தக்காரர்கள்...


Arul. K
அக் 07, 2024 05:35

இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உண்மை அதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை