உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏன் சத்தம் போடுறீங்க...: தலைமை நீதிபதி கோபத்தால் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்

ஏன் சத்தம் போடுறீங்க...: தலைமை நீதிபதி கோபத்தால் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, சத்தமாக பேசிய வழக்கறிஞரை தலைமை நீதிபதி கண்டித்தார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் குறித்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே பி பர்திவாலா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், 'இச்சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, கவுஸ்தேவ் பக்சி என்ற வழக்கறிஞர் கற்களை வீசும் வீடியோக்களும், புகைப்படமும் என்னிடம் உள்ளன' என குற்றம் சாட்டினார். அப்போது கவுஸ்தேவ் பக்சியும் கோர்ட்டில் இருந்தார்.கபில் சிபல் பேச்சு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கவுஸ்தேவ் பக்சி சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தவர் ஆவார். பக்சி எழுந்து நின்று, 'நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர் எப்படி குற்றம்சாட்டலாம்' என கபில் சிபலை பார்த்து சத்தமாக கேள்வி எழுப்பினார்.அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது ; முதலில் உங்கள் சத்தத்தை குறைக்க முடியுமா? தலைமை நீதிபதி முன் நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். பல்லாயிரகணக்கானோர் முன்னர் அல்ல. உங்களின் நடவடிக்கையை கடந்த 2 - 3 மணி நேரமாக கவனித்து வருகிறேன். நீதிமன்றத்திற்கு வெளியே பேசுவதை போல் பேசுகீறர்கள் என கோபமாக கூறினார். இதனையடுத்து கவுஸ்தேவ் பக்சி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 10, 2024 10:59

நீதிபதிகள் நீதிபதிகள் போன்று நடந்து கொண்டால் ஏன் இதுபோல் நடக்க போகிறது. கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இருந்து உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் வரை எல்லா நீதிபதிகளும் அரசு அலுவலகங்களில் ஜூனியர் கிரேடு கிளார்க் எழுதுவதை போன்று வழக்கு விசாரனை போது தலை குனிந்து எழுதிக் கொண்டேதான் இருப்பார்கள். நீதிமன்றங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிரில் மாட்டப்பட்டுள்ள மூன்று நான்கு மாத காலண்டர்களை பார்த்து தேதி சொல்லி வாய்தா சொல்லுவார். அதை நீதிபதி கட்டில் எழுதி நகர்த்தி விடுவார். ஏன் வாதி அல்லது பிரதிவாதி வரவில்லை என்ற சாதாரண கேள்வி கூட கேட்க மாட்டார்கள். இங்கே வக்கீல் எதோ சொல்லுவார் அது அவருடைய கிளையண்ட்க்காக காசு வாங்குகிறார்கள் அல்லவா அதற்காக. இப்படியே நாட்கள் கடத்தி ஒரு வழியாக இரு தரப்பும் மனச் சோர்வு அடைந்த பின்னர் மக்கள் நீதி மன்றம் லோக் அதாலத் வழக்கை மாற்றி சமரசம் என்ற பெயரில் யாராவது ஒரு தரப்பு வயிற்றில் அடித்து விட்டு வழக்கை முடித்து விடுவார்கள். இதற்கு நடுவில் தான் ஏதோ பெரிய வக்கீல் என காட்டிக் கொள்ள சந்தர்ப்பம் வரும்போது கோர்ட்டில் அல்லது வெளியில் அடிதடி ரகளையில் ஈடுபட்டு விளம்பரம் தேடி தாதா வக்கீல் ஆகி பணம் பன்ன ஆரம்பித்து விடுவார்கள். இதெல்லாம் நமது நீதிமன்றங்களில் சகஜமப்பா. இது வரை எத்துணை முறை வக்கீல்கள் அடிதடியில் ஈடுபட்டு உள்ளனர் ஏதாவது அவர்களுக்கு சேதாரம் ஆகி உள்ளதா. இல்லையே. இந்த வக்கீல்கள் தான் நாளைய நீதிபதிகள். அல்லது வாரிசு அடிப்படையில் நீதிபதி ஆகலாம்.


lana
செப் 09, 2024 23:36

தலைமை நீதிபதி ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர் அல்ல. நீதிமன்றம் உள்ளே சத்தம் போடாம இருங்க என்பது ok. அதென்ன தலைமை நீதிபதி முன்பு. அப்ப மற்ற நீதிபதிகள் முன்பு சத்தம் போடா லாமா


Ramesh Sargam
செப் 09, 2024 21:36

நீங்கள் சண்டைபோட்டுக்கொண்டு காலத்தை வீணடிக்காதீர்கள். வழக்கை எவ்வளவு சீக்கிரம் விசாரிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரித்து குற்றம் புரிந்தவர்களை சீக்கிரம் சிறையில் அடையுங்கள் அல்லது கழுவில் ஏற்றுங்கள்.


அப்பாவி
செப் 09, 2024 21:22

அமைதியா வாய்தா குடுத்துடறோமே... 58000 வழக்குகள் பாக்கிவெச்சிருக்கோமே. கத்தினா வழக்கு தீர்ப்பாயிடுமா?


Training Coordinator
செப் 09, 2024 19:41

உனக்கு என்ன பிரச்சினை?


GMM
செப் 09, 2024 18:14

தலமை நீதிபதி கோபம் கூடாது. கபில் வழக்கிற்கு தொடர்பு இல்லாத சம்பவத்தை வழக்கில் சேர்க்கலாமா ? வழக்கு திசை திரும்பிவிடும். வக்கீல் சத்தம் பற்றி பார் கவுன்சில் முடிவு எடுக்க முடியும் .


Nagarajan D
செப் 09, 2024 17:29

நீதிபதி அவர்களே நீங்கள் ஒன்றும் கடவுள் அல்ல... நீங்கள் வழங்கும் தீர்ப்புகள் எல்லாமே சரியானது அல்ல... பலலட்சம் வழக்குகள் நிலுவையிலிருப்பதே இதற்க்கு சாட்சி... வாய்தா கொடுக்காமல் ஜாமீன் கொடுக்காமல் தீர்ப்புகளுக்கு தடை இடைக்கால தடை உத்தரவு போடாமல் நீதி வழங்குங்கள் . பிறகு சத்தம் போட்டு பேசுவதை பற்றியோ அல்லது உங்களை மதிப்பதை பற்றியோ பேசுங்கள்... நாடாளுமன்றத்தை விட நீங்கள் உயர்ந்தவர்கள் என்ற மன எண்ணம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் . பிறகு தான் நீதிமன்றங்களை மதிக்க மக்கள் ஆரம்பிப்பார்கள்...


karupanasamy
செப் 09, 2024 17:03

இவருக்கு எப்போது பனி ஒய்வு


kantharvan
செப் 09, 2024 21:02

அவ்வளவு பயமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை