உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

புவனேஸ்வர்: '' கடவுள் ஜெகநாதரின் மண்ணுக்கு வர வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்தேன்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரம்பரியம்

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் 20 என்பது சிறப்பான நாள். இங்கு பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இன்று நடப்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது சேவைக்கு ஆர்ப்பணிக்கப்பட்டதற்கான கொண்டாட்டம் ஆகும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=56n46thi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒடிசா என்பது வெறும் மாநிலம் மட்டும் அல்ல. அது இந்தியா பாரம்பரியத்தை ஒளிரும் நட்சத்திரமாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறது. இதனால்தான் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் ஒடிசாவின் பங்கு அதிகரிக்கிறது. பாரம்பரியம் என்பது இந்தியா வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் மாடல்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் மாடல் ஆட்சியை மக்கள் பார்த்தனர். அப்போது சிறந்த நிர்வாகமோ அல்லது சாமானிய மக்கள் எளிதாக வாழ்வதற்கான வழிமுறை ஏதும் இல்லை. வளர்ச்சி திட்டங்களை தாமதப்படுத்துவதும், ஊழலை வளர்ப்பதுமே காங்கிரஸ் மாடலின் அடையாளமாக இருந்தது. ஆனால், சமீப நாட்களாக நாடு பா.ஜ., வின் வளர்ச்சி மாடலை பார்த்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நல்லாட்சி இல்லை.

அசாம், திரிபுரா நிலை

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் துவங்கி உள்ளது.கடந்த சில மாதங்கள் வரை அசாமில் நிலைமை மோசமாக இருந்தது. அங்கு ஸ்திரத்தன்மை இல்லை. வன்முறை கண்முன்னே தெரிந்தது. ஆனால், இன்று அந்த மாநிலம் வளர்ச்சி என்ற புதிய பாதையில் செல்கிறது. அதேபோல் திரிபுராவில் பல ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி இருந்தது. அப்போது வளர்ச்சி என்ற அளவுகோளில் பின்தங்கி இருந்தது. உள்கட்டமைப்பும் மோசமாக இருந்தது. பா.ஜ.,வுக்கு மக்கள் முதல்முறையாக வாய்ப்பு கொடுத்ததும், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதாரணமாக திரிபுரா திகழ்கிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி7 மாநாட்டுக்காக கனடா சென்ற போது, என்னை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா வந்துள்ளீர்கள். வாஷிங்டன் வழியாக நாடு திரும்புமாறு கூறினார். விருந்து மற்றும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அதிபரிடம், உங்கள் அழைப்புக்கு நன்றி. புனிதமான ஜெகநாதரின் நிலத்திற்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக டிரம்ப்பின் அழைப்பை பணிவாக மறுத்தேன். உங்களின் அன்பும், ஜெகநாதர் மீதான பக்தியுமே என்னை இந்த மண்ணிற்கு வரவழைத்தது.

பக்தர்களுக்கு மரியாதை

பா.ஜ., ஆட்சி அமைந்ததும், புரி ஜெகநாதர் கோவிலின் நான்கு வாயில் கதவுகளும் திறக்கப்பட்டன. பொக்கிஷ அறையும் திறக்கப்பட்டன. இது அரசியல் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடையாது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மரியாதை அளித்து திறக்கப்பட்டது.

மோடியின் கியாரண்டி

2014 க்கு முன்பு 125 பழங்குடியின மாவட்டங்கள், நக்சல் வன்முறையின் பிடியில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டுகளில் பழங்குடியின சமுதாயத்தை வன்முறையில் இருந்து அகற்ற பணியாற்றினோம். அங்கு வளர்ச்சி என்ற புதிய பாதையை உருவாக்கினோம். நாட்டில் இருந்து நக்சலிசம் அழிக்கப்படும். இது மோடியின் கியாரண்டி. வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக பா.ஜ., அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் பயனாக , நக்சலைட்கள் சார்ந்த வன்முறை 20 மாவட்டங்களுக்குள் சுருங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

6வது முறை

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தததும், இங்கு பிரதமர் மோடி வருவது இது 6வது முறையாகும். இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 திட்டங்களை துவக்கி வைத்தார். குடிநீர் மற்றும் பாசன வசதி சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலை மற்றும் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், பயணிகள் ரயில் ஒன்றையும், புதிய ரயில் வழித்தடத்தையும் துவக்கி வைத்தார். தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களின்படி 100 மின்சார பஸ்களையும் துவக்கி வைத்தார். ஒடிசாவின் வளர்ச்சி குறித்த ஆவணத்தையும் வெளியிட்டார்.

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்

புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நடந்தது. கான்வாய் புடைசூழ பிரதமர் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமர் வழிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூன் 21, 2025 05:41

இனிமே அமெரிக்கா பக்கமே போகமாட்டேன்...


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 10:57

அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தையும் கேட்க மாட்டேன்னு சொல்லு அப்புசாமி..


S.Balakrishnan
ஜூன் 21, 2025 05:20

காலம் பதில் சொல்கிறது. ஒரு காலத்தில் டீ வியாபாரம் செய்து அரசியலுக்கு வந்தவரை அனுமதிக்க மறுத்த அமெரிக்கா இப்போது அவரை வரவேற்கிறது: வேண்டி விரும்பி அழைக்கிறது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் பாரதத்தாயின் புதல்வருக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.


venugopal s
ஜூன் 20, 2025 21:59

சீச்சீ, அந்த அமெரிக்கப் பழம் புளிக்கும்!


SUBBU,MADURAI
ஜூன் 20, 2025 20:30

ஏற்கனவே இந்த கூறு தப்பிய டிரம்ப் ( வயதாகி விட்டால் மூளையில் உள்ள செல்கள் அழிய ஆரம்பிப்பது) பதவிக்கு வந்ததும் தான் என்ன செய்கிறோம் என்ற பிரஞ்ஞை இல்லாமல் சீனா முதற்கொண்டு மேற்கத்திய நாடுகளுக்கு சிறு பிள்ளை தனமாக போட்டி போட்டுக் கொண்டு வரி விதித்து அனைத்து நாடுகளின் ஷேர் மார்க்கெட்டை வலுவிழக்கச் செய்தது அதன் பின் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை சடுதியில் நிறுத்துவேன் என்று அறைகூவல் விடுத்து பல்பு வாங்கியது அதன் பின் இந்தியா பாகிஸ்தான் போரை வணிக வரி விதிப்பதை சுட்டிக்காட்டி நான்தான் போரை நிறுத்தினேன் என்று தம்பட்டம் அடித்து இந்தியா அதை மறுத்த பின்பும் அசிங்கப் பட்டாலும் பரவாயில்லை என்று கிளிப்பிள்ளை போல இன்றும் அதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும் கனடா மாநாட்டில் அவர்கள் அனைவரையும் நோஸ்கட் பண்ணிவிட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் நம் பிரதமர் மோடி அவர்களை பேச வருமாறு வாஷிங்டனுக்கு அழைத்து இருக்கிறார் அதே நேரத்தில் அங்கு பாகிஸ்தான் மிலிட்டரி ஜெனரல் அசிம் முனீரை அங்கு வரச்சொல்லி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பேச்சு வார்த்தை நடத்தி மத்தியஸ்தம் பண்ணி முடித்து அசிம் மூனீரையும் நம் பிரதமர் மோடியையும் நிற்க வைத்து அவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் தான் நின்று போட்டோ எடுத்து அதை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்கிற நினைப்பில் இருந்த டிரம்பிற்கு நம் பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுத்து கிட்டத்தட்ட ட்ரம்பின் கன்னத்தில் அறைந்து விட்டார் இதுதான் நம் பிரதமரின் சாணக்கிய ராஜதந்திரம் சும்மாவா சொன்னார் இத்தாலியின் பிரதமர் மெலோனி நம் பிரதமர் மோடியை பார்த்து நீங்கள்தான் உலகின் பெஸ்ட் மனிதர் என்று....


Ramesh Sargam
ஜூன் 20, 2025 20:25

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முநீர் உடன் சமரசம் பேச டிரம்ப் மோடியை அழைத்திருப்பார். மோடி அதை நன்றாக புரிந்துகொண்டு டிரம்பின் அழைப்பை நிராகரித்திருக்கிறார். டிரம்ப் குள்ளநரி என்றால், மோடி சாணக்கியர்.


Thirumal s S
ஜூன் 20, 2025 20:21

இந்த இரண்டும் பேரும் எவ்வளவு ... சொல்வார்கள்


Anantharaman Srinivasan
ஜூன் 21, 2025 00:37

மாத்தி யோசி.?


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 20:08

டிரம்பாரின் அழைப்பை நிராகரிக்க உண்மைக் காரணம் அவரது இரட்டை வேடம். ஒருபுறம் பாக்.,தீவிரவாதத்திற்கு ஆதரவா ராணுவ தளபதிக்கு விருந்து கொடுத்துக் கொண்டே மறுபுறம் நமது பிரதமருக்கு அழைப்பு? டிரம்புக்கு இந்த அவமான அடி போதுமா என்றால் இல்லை.


சமீபத்திய செய்தி