உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருந்துகள் விலை உயர்வு ஏன்? விளக்கம் கேட்கிறது நிலைக்குழு

மருந்துகள் விலை உயர்வு ஏன்? விளக்கம் கேட்கிறது நிலைக்குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த அக்டோபரில், 11 மருந்துகள் மீது 50 சதவீத விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததற்கு விளக்கம் அளிக்கும்படி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பார்லி., நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலையை உயர்த்த கோரி மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றதாக அது தெரிவித்துள்ளது.இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான பார்லி., நிலைக்குழு, மருந்து விலை அதிகரிப்பு, ஏழைகளை பாதிக்கிறது. எனவே, இதுகுறித்து விரிவான விளக்கமளிக்க வேண்டுமென ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளது.ஆஸ்துமா, கிளவுகோமா, தலசீமியா, காசநோய் மற்றும் மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 11 மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்காக விலை உயர்வை அறிவித்ததாக ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜன 01, 2025 19:37

சீனாவோடு இணக்கமாக போவது தவிர்க்க முடியாது. இல்லேன்னா மருந்து விலை இன்னும் எகிறும். நிலைக்குழு விளக்கம்.கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்.


அப்பாவி
ஜன 01, 2025 16:01

இந்த மருந்தெல்லாம் மோடி பார்மசியில் ஃப்ரீயா கிடைக்குதே. போய் வாங்கிக்கோங்க. சீக்கிரம் போங்க.


ஆரூர் ரங்
ஜன 01, 2025 12:09

சுற்றுசூழல் பாதிப்பு என எதிர்ப்பு கிளம்புவதால் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் INTERMEDIARIES சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. சுத்தம் சுகாதாரத்தை, சரிவிகித உணவை கடைபிடித்தால் அநாவசிய மருத்துவத்திற்கு தேவையிருக்காது.


Dharmavaan
ஜன 01, 2025 09:22

தடையின்றி என்பது மொண்டி சாக்கு லஞ்சம் கைமாறி இருக்கிறது . 50% கொள்ளையில் பங்கு


Jay
ஜன 01, 2025 09:01

மருந்து பொருட்கள் மிக குறைவான விலையில் மோடி மருந்தகத்தில் கிடைக்கிறது. பிரசர், சக்கரை, இருதய சிகிச்சை மாத்திரைகள் என அத்தியாவசிய மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரூ1800 மதிப்புள்ள மாத்திரைகள் ரூ300க்கு கிடைக்கிறது.


அப்பாவி
ஜன 01, 2025 08:22

ரூவாய் மதிப்பு வீழ்ச்சி சீன இறக்குமதி விலை அதிகம். மருந்து கம்பெனிகளின் இலாப பேராசை.


karutthu kandhasamy
ஜன 02, 2025 09:20

நீ அப்பாவி இல்லை படுபாவி .எதெற்கெடுத்தாலும் அதை குற்றம் சொல்லும் படுபாவி நீ உனக்கு வியாதி வந்தால் தெரியும் அப்போது


Kasimani Baskaran
ஜன 01, 2025 07:41

மூலப்பொருள்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.


சம்பா
ஜன 01, 2025 06:36

சாமானியன் செத்தான்


சமீபத்திய செய்தி