உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவுக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன்? மத்திய அரசுக்கு கேரளா கேள்வி

மஹாராஷ்டிராவுக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன்? மத்திய அரசுக்கு கேரளா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வெளிநாட்டு நிதியை பெற மஹாராஷ்டிராவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், “கேரளாவுக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன்?” என கேள்வி எழுப்பிய அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், மாநிலங்களிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் - 2010ன் கீழ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதியை பெற, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது:கேரளா, கடந்த 2018ல் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான உதவிகள் கிடைக்கவிருந்தன. இதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், மத்திய அரசு அனுமதி தரவில்லை.தற்போது, வெளிநாட்டு நிதியை பெற மஹாராஷ்டிரா அரசுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது? அனைத்து விவகாரங்களிலும் மத்திய பா.ஜ., அரசு அரசியல் செய்கிறது. மஹாராஷ்டிரா அரசு வெளிநாட்டு உதவியை பெறுவதில், கேரளாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கேரளாவுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது; அதில் எந்த நியாயமும் இல்லை.மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, நாட்டின் கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாகும். பேரிடர்களின் போது கூட, அரசியல் காரணங்களுக்காக மாநிலங்களை வேறுபடுத்துவது, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். நாட்டின் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
ஜூன் 02, 2025 13:29

மஹா. வில் டபுள் இஞ்சின் சர்க்கார் நடக்குது ஹை. ரெண்டுபேருக்கும் பங்கு தரணும் ஹை.


madhesh varan
ஜூன் 02, 2025 12:55

பிஜேபி கு ஆதரவாக இருக்கும் வெட்டி தண்டங்களான, வீணாபோன மூர்க்கனுங்களான சங்கிகளுக்கு பணம் கொடுக்கத்தான் அரசியலில் சட்டம் உள்ளது,


R.P.Anand
ஜூன் 02, 2025 10:01

கேரளமாநிலத்தில் வெளி நாட்டு பணம் ஆள் புடிக்க தான் பயன் படும். நம்பர் ஒன் பிராட்.


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 09:34

லவ் ஜிஹாத்துக்கு மத்திய நிதி,,? நோ சான்ஸ்.


venugopal s
ஜூன் 02, 2025 09:59

இது மத்திய பாஜக அரசு வழங்கும் நிதி அல்ல, வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கு மத்திய அரசின் அனுமதி மட்டுமே கோரப்பட்டது!


Iyer
ஜூன் 02, 2025 07:28

மகாராஷ்டிரா முதல்வர் தங்கக்கடத்தலில் ஈடுபட்டவர் இல்லை. மகாராஷ்டிரா முதல்வரின் மகனோ, மகளோ எந்தவித FINANCIAL IRREGULARITY ம் செய்யவில்லை


மூர்க்கன்
ஜூன் 02, 2025 11:06

அடப்பாவி எங்களுக்கு ஏதுவுமே தெரியாதுனு நினைச்சிட்டல்ல. மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி ஆக்ஸிஸ் வங்கியோடே உயர் நிர்வாகி அதனால மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் ஊதிய கணக்கை கூட ஆக்ஸிஸ் தனியார் வங்கியில் கட்டாயமாக்கினார்கள் இதுக்கு பேரு என்னவாம் நிதி முறைகேடு இல்லையா??


சாமானியன்
ஜூன் 02, 2025 06:23

மத மாற்றம் கேரளா.


Kasimani Baskaran
ஜூன் 02, 2025 03:39

மஹாராஷ்டிரா அரசு தங்கக்கடத்தில் ஈடுபடவில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 02, 2025 02:21

மஹாராஷ்டிராவில் அனுமதி கொடுத்தால் என்றால் கமிஷன் பாஜாக்காவுக்கு வரும் என்பதால் கொடுத்தோம். கேரளாவில் என்றால் எல்லா பணமும் மக்களுக்கு போய்விடுமே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 02, 2025 08:29

மக்களுக்கு போகுமா.....ஜிகாதிகளுக்கு போகுமா....????


Ganapathy Subramanian
ஜூன் 02, 2025 10:26

மக்கள் என்றால் எல்லா மக்களுக்குமா? ஜிகாடிஸ்ட்களுக்கு மட்டுமா? அந்த அரசு மக்களுக்கு ஏதும் செய்யாமல் தங்க கடத்தல் மற்றும் குடும்பத்தாருக்கு மட்டும் வசதிகளை அனுபவிப்பதால்தான் இப்படி நடக்கிறது. கம்மிஸ் இப்போது எல்லாமும் எல்லோருக்கும் என்று சொல்வதற்க்கே தகுதியற்றவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை