உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாவை நிறுத்தி வைத்தது ஏன்? கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

மசோதாவை நிறுத்தி வைத்தது ஏன்? கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களை நிறுத்தி வைத்தது என்பது குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும்,'' எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை காலைக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்து உள்ளது.'தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்' என, கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு, நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. காலை விசாரணை நடந்த நிலையில் மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:12 மசோதாக்கள் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை. 2 மசோதாக்களை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பினார். 10 மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார். அனைத்து மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்பு இருந்தும் இரண்டை மட்டும் அனுப்பியது ஏன்அரசியலமைப்பு விதி 200ஐ தவிர்த்து வேறு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதாஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தை விளக்க வேண்டும். கவர்னரின் அதிகாரத்தையும், பதவியையும் குறைத்து மதிப்பிடவில்லை. மசோதாவை கிடப்பில் போடும் கவர்னரின் நடவடிக்கையை மட்டும் முடிவு செய்ய உள்ளோம். நிறுத்திவைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறி, விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Dharmavaan
பிப் 08, 2025 16:38

எல்லாவற்றுக்கும் காரணம் மோடி சட்டத்திற்கு புறம்பான பாராளுமன்றம் அனுமதிக்காத கொலீஜியத்தை நீக்காமல் இருப்பதே


Laddoo
பிப் 09, 2025 09:16

முற்றிலும் உண்மை. கொலிஜியத்தில் கட்சிக்காரனும் வாரிசுக்காரனும் கண்ட மேனிக்கு நுழைச்சிட்டாங்க. காசு உள்ளே, திறமையும் பண்பும் வெளியே. வீணாய் போன சந்துருகளும் கர்ணன்களும் உள்ளே இருந்தால் நீதி என்னாவது


Dharmavaan
பிப் 08, 2025 16:26

ஆளுநர் செயல் கோர்ட்டுக்கு கட்டுப்பட்டதல்ல மோடி இதை ஜனாதிபதி ஆணை மூலம் தடுக்க வேண்டும் வரம்பு மீறிய கோர்ட்டின் செயல்.ஒழுங்கற்ற நீதித்துறை தன்னை முதலில் திருத்திக்கொள்ளட்டும்


C.SRIRAM
பிப் 08, 2025 11:18

கவர்னர் பதில் கேள்வி கேட்கலாம் தனி நபராக . ஏன் நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்க மிக மிக அதிக வருடங்கள் எடுத்து கொள்கின்றன ? அதுவும் தீர்ப்புகள் சமூக மற்றும் தேசவிரோத சக்திகளுக்கு பெரும்பாலும் ஆதரவாகவே உள்ளதே ஏன் ? என்று


rajan
பிப் 08, 2025 10:58

ஆளுநரை கேள்வி கேட்க உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் பிஜேபி கொள்கைப்படி கிடையாது


rameshkumar natarajan
பிப் 07, 2025 11:02

In democrazy government elected by people is always supreme than a appointed post. Governor is ed post and CM is elected post.


தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 01:55

நிறுத்தி வைப்பதும் வைக்காததும், கவர்னரின் விருப்பம். இதில் தலையிட சுப்ரிம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது.


AMLA ASOKAN
பிப் 06, 2025 23:30

கவர்னர் பெட்டி படுக்கையுடன் ரெடி . நாளை பீஹார் பயணம் .


Thiyagarajan S
பிப் 06, 2025 22:56

அட சும்மாதான் நிறுத்தி வெச்சாரு போங்கப்பா வேலைய பாத்துக்கிட்டு....


V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 22:15

நீதிமன்றத்தின் கேள்விகள் சிறப்பு. Straight, simple and specific queries. Superb. 12 மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள் ?? இரண்டை மட்டும் ஜனாதிபதிக்கு ஏன் அனுப்பினீர்கள்? கவர்னர் என்ன பதில்கள் குடுக்கறார் பார்ப்போம்.


guna
பிப் 06, 2025 22:35

கவலைப்படாதே...கவர்னர் நீகிவிடுவார் ..


Priyan Vadanad
பிப் 06, 2025 22:01

இனிமேல்தானா மாறிநிற்க வேண்டும்? கரும்புள்ளிதான்.


சமீபத்திய செய்தி