உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாவணகெரேவில் மனைவி போட்டி: வெற்றி பெற வைப்பாரா சித்தேஸ்வர்?

தாவணகெரேவில் மனைவி போட்டி: வெற்றி பெற வைப்பாரா சித்தேஸ்வர்?

காங்கிரஸ் கோட்டையாக இருந்த தாவணகெரே லோக்சபா தொகுதியை, 1996ல் பா.ஜ.,வின் மல்லிகார்ஜுனப்பா கைப்பற்றினார். 1998ல் காங்கிரஸ் வசம் சென்றது. 1999 இடைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ., வசமானது.அதன்பின், அவரது மகன் ஜி.எம்.சித்தேஸ்வர், 2004, 2009, 2014, 2019 ஆகிய நான்கு தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். கடந்த முறை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சப்பாவை விட, 1,68,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.இம்முறை ஐந்தாவது முறையாக போட்டியிட விரும்பினார். ஆனால், பா.ஜ., மேலிடமோ, 71வயது கடந்து விட்டீர், மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று கூறி விட்டது. மேலும், அவர் யாரை காண்பிக்கிறாரோ, அந்த நபருக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் உறுதி அளித்தது.இதன்படி, தன் மனைவி காயத்ரி சித்தேஸ்வருக்கு வாய்ப்பு கேட்டார். பா.ஜ., மேலிடமும் அவரையே வேட்பாளராக களமிறக்கியுள்ளது. தன் தந்தை, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மனைவியை வெற்றி பெற செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஷிவமொகாவில் நடந்த பா.ஜ., பொது கூட்டத்திலும், காயத்ரியை ஜீப்பில் தன் அருகில் நிற்க வைத்து, மேடைக்கு அழைத்து வந்தார்.மேடையிலும், பொது கூட்டம் முடிந்ததும், சித்தேஸ்வரிடம் சென்று, விரலை நீட்டி சிரித்தபடி, மனைவியை வெற்றி பெற செய்யும்படி உத்தரவிட்டார். பிரதமரே கூறியபின், மிகவும் எச்சரிக்கையடைந்துள்ள அவர், கட்சி பிரமுகர்கள், தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்கு தயாராகி உள்ளார்.ஏற்கனவே மோடி அமைச்சரவையில், 2014 முதல், 2016 வரை கனரக தொழில் துறை இணை அமைச்சராக சித்தேஸ்வர் பணியாற்றி இருந்தார். தற்போது காயத்ரி வெற்றி பெற்றால், அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.எனவே அல்லும், பகலும் உழைத்து, மனைவியை எப்படியாவது எம்.பி.,யாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார். காங்கிரசில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார்.தாவணகெரேவில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாமனுார் சிவசங்கரப்பா, செல்வாக்குமிக்க தலைவராக இருந்தாலும், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த சித்தேஸ்வரும் சம பலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. லிங்காயத்துகள் அதிகமாக இருக்கும் தொகுதி என்பதால், பா.ஜ.,வுக்கு இங்கு கூடுதல் பலம் உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்