உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்கு காதலனுடன் திருமணம்; உயிர் பயத்தில் கணவர் திடீர் முடிவு

மனைவிக்கு காதலனுடன் திருமணம்; உயிர் பயத்தில் கணவர் திடீர் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மீரட்டில், தன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று, உடலை துண்டாக்கி, அதை பெரிய டிரம்மில் மனைவி வைத்தார்.அதுபோல, அவுராயியாவில், கட்டாய திருமணம் செய்து வைத்ததால், திருமணமான இரண்டு வாரங்களில், தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரை இளம் பெண் ஒருவர் கொலை செய்துள்ளார்.இந்நிலையில், சந்த் கபிர் நகரில் உள்ள கடார் ஜாட் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி பப்லு, தன் மனைவியை அவருடைய காதலனுடன் சேர்த்து வைத்துள்ளார். திருமணத்தை அவரே முன்னின்றி நடத்தி வைத்துள்ளார்.கடந்த, 2017ல் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகாவை திருமணம் செய்த பப்லுவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளியூரில் வேலை செய்து வந்த பப்லுவுக்கு, அவரது மனைவிக்கும், அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து ஊருக்கு திரும்பிய அவர், இது குறித்து விசாரித்தார். அப்போது தன் மனைவி, 18 மாதங்களாக மற்றொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன் மனைவியை, அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். குழந்தைகளை தானே வளர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால், இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ram pollachi
மார் 28, 2025 17:28

இந்த மாதிரியான சமாச்சாரம் எல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்பே நம் ஊரில் நடந்திருக்கிறது.


Kanns
மார் 28, 2025 17:21

Better Courts/Police Order Arrest-Prosecution-Conviction Against Dreaded Crime of Adulteries, Family Abandonment , NonMarrying by All Women Out of Marriage Besides Heavy Compensation to Affected Males


अप्पावी
மார் 28, 2025 14:55

பேசாம எல்லோரும் ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்கலாம். ரெண்டு அப்பா. ஒரு அம்மா. அமெரிக்காவில் இது சகஜமா நடக்குது.


அப்பாவி
மார் 28, 2025 10:00

உ.பி இதிலெல்லாம் ரொம்ப அட்வான்ஸ்டு... போயி இன்னொரு தடவை கங்கைல முழுக்கு போட்டுரு நைனா.


சண்முகம்
மார் 28, 2025 09:23

தன் இரண்டு குழந்தைகளை மனைவி வளர்க்க அனுமதிக்காதது, அவளுக்கு கொடுக்கப்பட்ட பெரிய தண்டனை. இருந்தாலும் அவள் கேட்டு வருவாள். சட்டப்படி விவாகரத்து இல்லாமல் போனதனால் அவளுக்கு சட்டப்படி கேட்கவும் முடியாது. கணவனது மாஸ்டர் ஸ்ட்ரோக்.


ஆரூர் ரங்
மார் 28, 2025 09:23

அந்த 7 நாட்கள் காலம் மலையேறிவிட்டது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 28, 2025 08:56

கற்பனை என்று பெயர் போட்டு எடுக்கும் திரைப்படங்களும், தொலைகாட்சி தொடர்களும் தான் சமூகத்தை சீரழித்து இருக்கிறது..... இதற்கு சட்டங்களும் துணை போகிறதே....தனி மனித சுதந்திரம் என்ற பெயரில்.... கால்நடைகளுக்கு கடிவாளம் என்று உள்ளது அது அவைகளை பாதுகாக்கும் அவ்வளவு ஏன் உயிரற்ற வாகனங்களுக்கும் ப்ரேக் என்று ஒன்று உள்ளதால் அது பாதுகாக்க படுகிறது..... ஆனால் மனிதர்களுக்கு என்ன பாதுகாப்பு.....ஏன் இந்த வானளாவிய தனி மனித சுதந்திரம்..... கட்டுபாடுகள் இல்லாமல் யூடியூப்பில் உலாவி வரும் ஆபாச வீடியோக்கள் .... குழந்தைகள் கையில் சரளமாக உலாவும் ஆன்ராய்டு ஐ ஃபோன்கள்....அதை பதிவிறக்கம் செய்து பார்க்கும் விடலை பருவ குழந்தைகள் அதை நிஜத்தில் காண/செய்ய துடிக்கும் போது அதற்கு தீனி போடுவதை போல பெண் சுதந்திரம் என்ற பெயரில் நவநாகரீக உடைகள் அனிந்து தன் கணவன் மட்டுமே பார்க்க வேண்டிய உடலழகை காட்டுவதால் காமம் தலைக்கேறி மழலைகளை பாலியல் துண்புறுத்துவதும் இச்சைகளை பள்ளி மாணவிகளிடம் தீர்த்து கொள்வதால் ஏற்படும் கலாச்சார சீர்கேடுகள் எல்லாம் நீதிமன்றங்களுக்கு தெரியாதா பின் எதற்காக கடுமையான சட்டங்களை இயற்றுவதில்லை..... சமூகம் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லையோ.....75 ஆண்டுகளுக்கு முன் அன்றைய கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் இயற்றிய சட்டங்களை இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் சட்டங்களை மாற்றாமல் இருப்பது ஏன்..... நீதிமன்றங்களுக்கு மக்கள் மீது அக்கறையின்மை, சமுதாயம் சீரழிந்தாலும் பரவாயில்லை தற்போதைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்வோம் என்ற சுயநல போக்கு....இது மாறாதவரை சமுதாயத்தில் குற்றங்கள் இன்னும் மோசமாகத் தான் போகும்.....!!!!


Padmasridharan
மார் 28, 2025 08:28

Well Done Boy. இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று கூறிக்கொள்வது இதுதானோ. இந்தியப் பொருளாதாரம் உயர்த்தி, அரசியல் சண்டைகள் அதிகமாக்கி, குடும்ப சண்டைகள் பிரிவினைகள். . Food_Shelter_Clothes என்றது போயி மமாது போதை_லவஞ்சம்_காமம் என்றாகியிருக்கிறது


RAMKUMAR
மார் 28, 2025 07:59

முடியல ....


VENKATASUBRAMANIAN
மார் 28, 2025 07:28

நாடு எங்கே போகிறது. கலாச்சார சீரழிவு. வருங்கால சந்ததியினர் மிகவும் கஷ்டப்படுவார்கள். நாம் அவர்களுக்கு இதைத்தான் விட்டு செல்கிறோமா. சிந்தியுங்கள்


sridhar
மார் 28, 2025 07:43

நம் கலாச்சாரத்தை சீரழித்த இரண்டு விஷயங்கள் - சினிமாவும் அரசியலும் .


சமீபத்திய செய்தி