உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி டார்ச்சர்; கணவர் தற்கொலை

மனைவி டார்ச்சர்; கணவர் தற்கொலை

ஹூப்பள்ளி; மனைவியின் தொல்லையால், மனம் நொந்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.ஹூப்பள்ளியின் சாமுண்டீஸ்வரி நகரில் வசித்தவர் பீட்டர், 32. இவரது மனைவி பிங்கி, 27. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பிங்கி, வேறு ஒரு நபருடன் ஊர் சுற்றினார். இதை கணவர் பீட்டரும், அவரது குடும்பத்தினரும் கண்டித்தனர்.ஆனால் பிங்கி, 'என் வாழ்க்கையில், என் விருப்பப்படி தான் இருப்பேன்' என, அலட்சியமாக கூறினார். பலவிதங்களிலும் கணவருக்கு தொல்லை கொடுத்தார். மனைவியின் செயலால், பீட்டர் மனம் நொந்தார்.பிங்கி, சில மாதங்களாக கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று இம்மனு விசாரணைக்கு வரவிருந்தது. 'ஜீவனாம்சமாக 20 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, கணவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் பீட்டர், தன் மனைவியால் ஏற்பட்ட தொந்தரவு குறித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று காலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்களும், குடும்பத்தினரும் பீட்டரின் சவப்பெட்டி மீது, 'மனைவியின் இம்சை தாங்காமல் இறந்தார்' என, எழுதியிருந்தனர்.அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி