உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானை ஆனந்த குளியல்

காட்டு யானை ஆனந்த குளியல்

மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் காட்டு யானை ஆனந்தமாக குளியலிட்டதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அங்கு அணையின் கரையோரம் உள்ள புல்மேடுகளில் கடந்த மூன்று நாட்களாக நான்கு காட்டு யானைகள் முகாமிட்டன. அவை அவ்வப்போது நீர் அருந்த அணையின் நீர் தேக்கத்திற்கு வந்து சென்றன. நேற்று காலை 10:00 மணிக்கு நீர் அருந்த மூன்று காட்டு யானைகள் வந்தன. அதில் ஒரு யானை நீர் அருந்திவிட்டு தண்ணீருக்குள் இறங்கி ஆனந்தமாக குளியலிட்டது. தண்ணீரை துதிக்கையால் பீச்சியடித்து குளியலிட்ட காட்சியை சுற்றுலா படகுகளில் பயணித்த பயணிகள் பார்த்து ரசித்தனர். ஒரு மணி நேரம் வரை குளியலிட்ட யானை பின்னர் கரை திரும்பியது. அதுவரை இரண்டு யானைகள் கரையில் பொறுமையாக காத்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை