வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேபோட்டிசம் ஒழிக
கர்நாடக ஆளுங்கட்சி காங்கிரசை போன்று, எதிர்க்கட்சியான பா.ஜ.,விலும் மாநில தலைவர் விஜயேந்திராவை மாற்ற, பகிரங்கமாகவே முயற்சி நடக்கிறது. பதவியை தக்க வைத்துக் கொள்ள, விஜயேந்திரா போராடுகிறார். மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதாக, மேலிடம் அறிவித்துள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.விஜயேந்திராவை பதவியில் இருந்து, இறக்கியே ஆக வேண்டும் என, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கோஷ்டி முண்டா தட்டி வருகிறது. 'தலைவர் பதவி தேர்தலில், விஜயேந்திராவை எதிர்த்து நானே களமிறங்குவேன்' என, எத்னால் சவால் விடுத்துள்ளார்.மாநில தலைவர் தேர்தல் பொறுப்பாளரான, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான், கர்நாடகாவுக்கு வந்துள்ளார். எந்த குழப்பமும் இல்லாமல், மாநில தலைவரை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். ஆனால் எத்னால், விஜயேந்திரா கோஷ்டியினர் பரஸ்பரம் வசைபாடுவதை நிறுத்தவில்லை.இந்நிலையில், மாநில பா.ஜ., பொதுச்செயலர் பதவியை, சுனில்குமார் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இந்த பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொண்டர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.நளின்குமார் கட்டீல், மாநில பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலகிய பின், பலரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், மாநில தலைவராக விஜயேந்திராவை மேலிடம் நியமித்தது. அவரும் ஆர்வத்துடன் கட்சிக்கு தலைமை பொறுப்பேற்று வழி நடத்தினார். தனக்கு நெருக்கமான இளம் தலைவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தினார். அதே போன்று சுனில்குமாருக்கு மாநில பொதுச்செயலர் பதவி வழங்கினார். தற்போது இந்த பதவியில் இருந்து விலக, அவர் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.விஜயேந்திரா அணியில் இருந்து வெளியே வர சுனில்குமார் ஆர்வம் காட்டுகிறார். இவருக்கு விஜயேந்திரா மீது விருப்போ, வெறுப்போ இல்லை. இவரை பற்றி விமர்சித்ததும் இல்லை. ஆனாலும், இவரை விட்டு விலகியே இருக்கிறார்.சமீபகாலமாக, விஜயேந்திராவுடன் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை. இவரை மாநில தலைவர் பதவியில் இருந்து கீழே இறக்க தீவிர முயற்சி நடக்கும் நிலையில், பொதுச்செயலர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.ஒருவேளை சுனில்குமாரின் வேண்டுகோளை, மேலிடம் ஏற்றுக்கொண்டால், பொதுச்செயலர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்பதவியை பலர் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன் இப்பதவியை நிர்வகித்த ரவிகுமார், அருணுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். குறிப்பாக, ரவிகுமார் பொதுச்செயலர் பொறுப்பேற்கலாம்.ஏன் என்றால், இவருக்கு கட்சியை பலப்படுத்தும் திறன் உள்ளது. 2019ல் கலபுரகியில் மல்லிகார்ஜுன கார்கே தோற்க முக்கிய காரணமாக இருந்தவர். எனவே, சுனில்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டால், ரவிகுமார் பொதுச் செயலராக கூடும்.
நேபோட்டிசம் ஒழிக