உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழுமா?

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழுமா?

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்குள் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலர் அதிருப்தியில் உள்ளதால், பஞ்சாபில் அக்கட்சியின் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.டில்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 48ல் வென்று, 27 ஆண்டுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது. தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது.மதுபான ஊழல் வழக்கில் சிறை சென்றதால், டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகிய, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதுடில்லி சட்டசபை தொகுதியில் அவர் தோல்வியடைந்தது, மிகப் பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், முதல்வர், எம்.பி., - எம்.எல்.ஏ., என்று எந்த பதவியிலும் கெஜ்ரிவால் இல்லை.ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் காலியாக உள்ள லுாதியானா சட்டசபை தொகுதிக்கு விரைவில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடலாம் என்றும், பஞ்சாப் முதல்வராக அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. இதைத் தவிர, பஞ்சாபில் இருந்து ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின.இந்த சூழ்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், 91 எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு வரும்படி கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். தன் இல்லத்தில் அவர்களை கெஜ்ரிவால் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.டில்லி சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்தது. அப்போது, பஞ்சாப் காங்., தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், 'டில்லியில் ஆம் ஆத்மி தோல்வியடைந்தால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல் ஆளாக அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேருவார்' என, கூறியிருந்தார். மேலும், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், கட்சியில் இருந்து கூண்டாக வெளியேற அவர்கள் தயாராக உள்ளதாகவும், பஜ்வா கூறியிருந்தார்.கடந்த 2022ல் பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 117 இடங்களில், ஆம் ஆத்மி 92ல் வென்றது. காங்கிரஸ், 18ல் வென்றது. அகாலிதளம், மூன்று இடங்களைப் பிடித்தது.டில்லி தோல்வியையடுத்து, கட்சியின் பஞ்சாப் பிரிவில் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும், எம்.எல்.ஏ.,க்கள் பலர் கூண்டோடு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனால், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழலாம் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்தே, அவர்களை கெஜ்ரிவால் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

எந்த குழப்பமும் இல்லை!

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று கூறியுள்ளதாவது:கட்சி மாறுவது என்பது காங்கிரசின் கலாசாரம். ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவில் எந்தக் குழப்பமும் இல்லை. அனைவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சி கவிழவோ, ஆட்சி மாற்றம் ஏற்படவோ வாய்ப்பில்லை.ஆம் ஆத்மியின், 30 - 40 எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என, காங்கிரசின் பிரதாப் சிங் பஜ்வா இதற்கு முன்பும் கூறியுள்ளார். அது பொய்யான தகவல்; அதைப் பொருட்படுத்த வேண்டாம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பற்றி கூறும் காங்கிரசுக்கு டில்லியில் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்? ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது குறித்து அவர்கள் முதலில் கவலைப்படட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mediagoons
பிப் 12, 2025 23:55

மொத சட்டசபையையும் வைத்துள்ள கட்சி ஏன் டில்லியை பார்த்து பயப்படவேண்டும்.


Mediagoons
பிப் 12, 2025 23:51

கனவு காண்கிறார்களா இந்துமதவாதிகள் ?


முருகன்
பிப் 12, 2025 19:56

கட்சி தாவும் அனைவரையும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் அதோடு தாவும் கட்சிக்கும் தடை விதிக்க வேண்டும்


அசோகன்
பிப் 12, 2025 15:49

இதெல்லாம் ஆப்பு கட்சியே பரப்பும் பொய் யுரை..... இதனால் மக்கள் மனதில் அனுதாபத்தை பேர முயற்சி


Indhuindian
பிப் 12, 2025 15:00

கட்சியே கோவிந்தா ஆகப்போவுது இனிமே ஆட்சி இருந்தா என்ன இல்லேட்டா என்ன


venugopal s
பிப் 12, 2025 13:09

காட்டில் எந்த மிருகம் இறக்கும் என்று காத்துக் கொண்டு இருக்கும் பிணந்திண்ணி கழுகுகள் போல் காத்திருக்கிறது!


Bala
பிப் 12, 2025 10:58

BJP ennam palikaathu


அப்பாவி
பிப் 12, 2025 10:53

நமது சட்டங்களிலேயே கேவலமான சட்டம் இதுதான். ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை ஐந்து வருஷம் ஆட்சி செய்த அனுமதிங்க. தவறாக வாக்களிக்கும் மக்களுக்கு தண்டனதான் அது. அடுத்த முறை அதே தவறை செய்யாதீங்கன்னு சொல்லுங்க. எவனாவது கட்சி மாறுனா எம்.எல்.ஏ/எம்.பி பதவி இழப்பான்னு சட்டம் போடுங்க.


Kasimani Baskaran
பிப் 12, 2025 14:04

சட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதோடு ஓட்டைகளும் இருக்கத்தான் செய்கிறது.


sankaranarayanan
பிப் 12, 2025 10:35

பணத்தை அவிழ்த்து விடுவார்கள் அரசை கவிழ்த்த விடுவார்கள் கவிழ்ந்தே போகும் இதுதான் அரசியல் நாடகம்


Kasimani Baskaran
பிப் 12, 2025 07:05

கவிழாது, கவிழ்ப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை