உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்

பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பெங்களூரு அணிக்கான பாராட்டு விழா நடந்த சின்னசாமி மைதானத்தின் வெளியே நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆறுதல் கூறினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xfa4m4il&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது; பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த துயர சம்பவத்திற்கு அரசு துக்கம் அனுசரிக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகமாக கூடினர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விதான சவுதா முன்பு நடந்த நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் முண்டியடித்து சென்றதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கிரிக்கெட் வாரியமும் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் அமரும் வசதியுள்ளது. பாராட்டு விழாவை பார்ப்பதற்காக 2 முதல் 3 லட்சம் பேர் வரை அங்கு குவிந்தனர். நேற்று பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று காலை பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வளவு கூட்டம் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சின்னசாமி மைதானத்தில் இருக்கைகள் இருக்கும் அளவுக்கு தான் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். மீறிப்போனால், சில ஆயிரம் பேர் மட்டும் கூடுதலாக வருவார்கள் என்று நினைத்தோம். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும். காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும். மொத்தம் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பிவிட்டனர். காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு முதல் போக்குவரத்து வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. பா.ஜ.,வின் அரசியலுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பு குறைபாடா? அல்லது வேறு எதாவது காரணமா? என்பது விசாரணையில் தெரிய வரும். மைதானத்திற்கு உள்ளே செல்வதற்கான நுழைவு வாயில் சிறியதாக இருக்கும். ஒரே சமயத்தில் ரசிகர்கள் உள்ளே செல்ல முயன்றதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த பாராட்டு விழா குறித்து ஆலோசனை நடத்தும் போது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. இதுபோன்ற கூட்டநெரிசல் சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்தது. இது எதிர்பாராமல் நிகழ்ந்ததாக கருதுகிறேன். விதான சவுதாவில் நிகழ்ச்சி நடத்த நாங்கள் முடிவு செய்யவில்லை. கர்நாடகா கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதன் பேரில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vijai hindu
ஜூன் 05, 2025 14:47

இது தனியார் நடத்தும் கிரிக்கெட் போட்டி இதற்கு அரசு வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டும்


Kannan
ஜூன் 05, 2025 09:36

இந்த அணியின் பெயர்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு... மற்றபடிக்கு இது ஒரு தனியார் நடத்தும் கிரிக்கெட் குழு.இதில் நாட்டின் பல பகுதியை சேர்ந்த வீரர்கள் விளையாடி வரும் நிலையில் இந்த அணி வெற்றியை கர்நாடக அரசு ஏன் சொந்தம் கொண்டாடி விதான் சவுதாவில் விழா எடுக்க வேண்டும்... எந்த முன்னேற்பாடும் செய்யாமல் ஸ்டேடியத்தில் விழா நடத்தி 11 உயிர்கள் பறிபோக ஏன் அரசும் துணை போக வேண்டும்.பத்து லட்சம் தவறுக்கான அரசுக்கான அபராத தொகையா? உயிர்களை மீட்டுத்தருமா....


Mohan
ஜூன் 05, 2025 05:29

இதில் உங்கள் kavanathai வையுங்கள் ,கமல் படத்தை ரிலீஸ் செயுங்கள்


Anantharaman Srinivasan
ஜூன் 04, 2025 22:48

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். நடந்த சோக விவகாரத்தை பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சோகத்தை பெரிதாகாமல் தடுக்கவும், எதிர்கட்சிகளின் வாயை அடைக்கவும் பல மாநிலயரசுகள் 10 லட்சம் தருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.


Raja k
ஜூன் 04, 2025 21:34

பல கோடிகள் கொட்டி கோடிஸ்வரன்களுக்கு பாராட்டுவிழா,, கொண்டாட போய் உயிர் கொடுத்தவனுக்கு பத்து லட்சம்,,, என்னே உங்கள் அரசாங்கம்,


அப்பாவி
ஜூன் 04, 2025 21:23

ஏற்கனவே நெரிசலில் சிக்கி 10 பேர் அவிட். ஒரு டீமே அவுட்


Sesh
ஜூன் 04, 2025 21:15

உளவுத்துறை தோல்வி . சென்னை விமான சாகச நிகழ்ச்சி விபத்து போல் நேர்ந்து உள்ளது .


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 20:59

சமாளிப்பது எப்படி ன்னு விடியல் கிட்ட கத்துக்கங்க. விமான சாகச நிகழ்ச்சி விபத்தை RSB மீடியாக்கள் மூலமாக சூப்பரா அமுக்கிவிட்டாரே.


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 04, 2025 20:40

பிரச்சினை என்னவென்றால் இந்த வெற்றி என்பது இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பெற்ற வெற்றி அல்ல. இந்தியாவில் லோக்கல் அளவில் நடந்த சர்வதேச அங்கீகாரம் இல்லாத போட்டியில் கிடைத்த வெற்றி. இந்தக் கொண்டாட்டம் கூட ஒரு மொழிவெறி அடிப்படையாகவே கருதப்படும். அதற்கு அரசும் துணை போனது மானுடத்தால் மன்னிக்கப்படாததாகவே இருக்கும்.


புதிய வீடியோ