உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பிரதமரின் தாயை கிண்டல் செய்வதா?: காங்., ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்!

 பிரதமரின் தாயை கிண்டல் செய்வதா?: காங்., ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்!

புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கிண்டல் செய்ததற்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்துாரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், நகைச்சுவை கலைஞர் புல்கித் மணியுடன் சேர்ந்து 'மிமிக்ரி' எனப்படும் பலகுரல் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசுவது போல் இருவரும் நடித்து காண்பித்தனர்.

உறுதியான கடமை

கூட்டத்தினரை பார்த்து கையசைப்பது, பின் இருவரும் சிரிப்பது என பிரதமரின் உடல்மொழியை கிண்டல் செய்து இருவரும் நடித்தனர். பிரதமரின் மறைந்த தாயை கிண்டல் செய்தும் நிகழ்ச்சியில் நடித்து காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய ராகுல், 'நீங்கள் சாதாரணமான ஒருவராக உங்களுடைய நண்பரின் வீட்டுக்கு செல்லவில்லை. இந்திய பிரதமர், வெறும் நட்பை மட்டும் வளர்க்கும் பணியில் ஈடுபடக் கூடாது. 'அவர்களுடைய நட்பால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே உறுதியான கடமை' என, கடுமையாக விமர்சித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, ராகுலின் செயலுக்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கூறியுள்ளதாவது: பிரதமரையும், அவரது தாயையும் கேலி செய்த போது, அதை ஆதரிக்கும் வகையில் ராகுல் சிரித்து ரசிக்கிறார். வயதான, பலவீனமான ஒரு தாயை கேலி செய்ததன் வாயிலாக, பெண்களை அவமதித்துள்ளார். நாட்டின் பிரதமரை கேலி செய்யும் வகையில் நடத்தப்பட்ட தரம் குறைந்த அந்த நாடகத்தை, எந்தவொரு ஒழுக்கமான நபரும் ரசிக்க மாட்டார். ஆனால், மேடையில் அமர்ந்து உரக்க சிரித்ததன் வாயிலாக, தன் பண்பற்ற மற்றும் நாகரிகமில்லாத, நாவடக்கமற்ற அரசியல் நடத்தையை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். இந்த அநாகரிக பேச்சு வழக்கு கலாசாரம்தான், அவராலும், காங்கிரஸ் கட்சியாலும் நாட்டின் இளைஞர்களுடன் ஒரு இணக்கமான தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். தரக்குறைவான நிகழ்ச்சிகளை ஆதரிக்கும் ராகுலை, ஒரு அரசியல் தலைவராக ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மனிதநேயமற்ற செயல்

'ராகுலும், காங்கிரசும் தார்மிக ரீதியாக அதலபாதாளத்திற்கு சென்று விட்டன. 'மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடலை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் மறைந்த தாயை கேலி செய்வதும், அவமதிப்பதும் அடிப்படை மனிதநேயமற்ற செயல்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

spr
செப் 22, 2026 13:43

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், நகைச்சுவை கலைஞர் புல்கித் மணியுடன் சேர்ந்து மிமிக்ரி எனப்படும் பலகுரல் நிகழ்ச்சி நடத்தினார். அதில் அவர் குறிப்பிட்டது அவரது தாய் சோனியா குறித்தே அவர் சொன்னதைக்கேளுங்கள் "தாய்க்கு நாற்காலி பிரதமர் பதவி கொடுங்கள்’ என்றுதான் அவர்கள் கேலி செய்கிறார்கள், இங்கே குறிப்பிடப்பட்டது உயிருடன் இருக்கும் சோனியாவைக் குறித்துத்தான். மோடிஜியின் தாய் இறந்தவராயிர்றே. இறந்தவர்களுக்கு எப்படி நாற்காலி தர முடியும். அவர்களுடைய முழு கட்சியுமே ‘மகனுக்கு நாற்காலி வாங்கித் தருவதற்காகவே’ இருக்கிற நிலையில் தனது அம்மாவுக்கு தேர்தலில் வென்று நாற்காலி பிரதமர் பதவி பெற வழியில்லை கெஞ்சியாவது கேட்போம் என்று கேட்கிறார்


V.Mohan
செப் 21, 2026 17:39

இந்திய நாட்டு மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தி என்ன??. அதாவது மக்களே நீங்கள் நாட்டின் பிரதம மந்திரி ஆக விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் விஷய ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை அந்த ஞானம் இருந்தால் தலைமை பதவி கிடைக்காது. நீங்கள் மூளையை விட உடலை கட்டுக் கோப்பாக வைக்க வேண்டும். ஏனென்றால் உங்களை போலீசாரின் முரட்டுத்தனத்தை தாக்குப் பிடிக்க தயார் செய்து கொள்ள வேண்டும். யாரை வேண்டுமானாலும் நீங்கள் நக்கல் அடிக்கலாம், கேவலமாக பேசலாம், உங்கள் பெயர் பின்னால் காந்தி என்று வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அன்னை சோனியாவின் இல்லத்தில் ஏதாவது காரியமாக வந்து போய்க்கொண்டு ஊடகங்களின் போட்டோவில் இடம் பெற வேண்டும். கிடைத்த சமயத்தில் ஒரிரு முறை பிரதமர் மோடியை அவமானமாக நக்கலடித்து ராகுலை சிரிக்க வைத்து அவரது அன்புக்குரியவர் ஆகிவிடுங்கள். அப்புறம் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தவுடன் உங்களுக்கு விளையாட்டுத்துறையிலோ, கல்வித்துறையிலோ அமைச்சர் போஸ்ட் கன்ஃபர்ம் . வாழ்க காந்தி, காந்தியின் ஸ்வீகாரப் பேரன் மற்றும் குடும்பம்


Barakat Ali
செப் 21, 2026 14:32

பிஜேபி கண்டனம் தெரிவிச்சதால நான் திருந்திட்டேன் .... இனிமே இப்படிப் பேசமாட்டேன் .... இத்தோட அரசியலுக்கே முழுக்குப் போடுறேன் ன்னு ஷேஹ்ஜதி சொல்லிட்டார்னா பாஜக பதறியடிச்சு இப்படியெல்லாம் பொசுக்குன்னு கோவிச்சுக்கிட்டா எப்படி ?? எங்களைத் திட்டி, கிண்டல் பண்ணிக்கிட்டு அரசியல்ல இருங்க .... நேஷனல் ஹெரால்டு தொடங்கி எந்த வழக்கிலும் சட்டம் உங்களைத் தொடாம எப்பவும் போல ஒதுங்கியே இருக்கும், அதுக்கு நாங்க கியாரண்டி ன்னு வாக்குக்கொடுப்பாங்க ....


கண்ணன்,மேலூர்
செப் 21, 2026 14:20

உன் மம்மியைப் பற்றி இப்படி சொன்னால் நீ இதே போலத்தான் comment போடுவியா? இல்லை வழக்கம் போல சொறிந்து கொண்டு போய் விடுவாயா? நான் பலமுறை உன்னை எச்சரித்து விட்டேன் எங்கள் இந்து மதத்தில் தலையிடாதே என்று இத்துடன் நிறுத்திக்கொள் உன் மத துவேஷத்தை...


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 21, 2026 12:00

எடப்பாடியாரின் தாயார் மறைவின்போது, மறைந்த அந்த 90 வயது மூதாட்டியை அருவருக்கத்தக்க வகையில் பேசிய ஆ ராசாவை ஸ்டாலினோ கனிமொழியாரோ கண்டித்தனரா? இல்லையே பாஜகவும் கண்டனம் தெரிவிக்கவில்லையே தனக்கு வந்தால் இரத்தம் மற்றவர்க்கு என்றால் தக்காளி சட்டினி


Anand
செப் 21, 2026 11:56

பதிலுக்கு அவர்கள் கிண்டல் செய்தால் நாறிவிடும்.


sankar
செப் 21, 2026 11:45

கேவலமான ஒரு ஜந்து


baala
செப் 21, 2026 09:12

இவர் ஏன் கோபப்பட வேண்டும்.


baala
செப் 21, 2026 09:10

எல்லா அரசியல்வாதிகளும் தரம் கெட்டவர்கள்.


V RAMASWAMY
செப் 21, 2026 09:10

Better not to give him much publicity and make this ignorable person popular.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை