மேலும் செய்திகள்
திருச்சி அருகே வாலிபர் எரித்து கொடூர கொலை
22-Apr-2025
டிராக்டர் மோதி பெண் சாவு
28-Mar-2025
பட்பர்கஞ்ச்: கிழக்கு டில்லியின் பட்பர்கஞ்சில் கத்தியால் குத்தப்பட்டும், தீ வைத்து எரிக்கப்பட்டும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார்.பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து புகை வெளியேறுவதாக பாண்டவ் நகர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புகை வந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். தீக்காயங்களுடன் ஒரு பெண், சுயநினைவிழந்து கிடந்தார். அவரை மீட்டு லால் பகதுார் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த பெண், பிரியங்கா, 27, என்பது தெரிய வந்தது. அவரது கணவர் அருணை போலீசார் தேடி வருகின்றனர்.இதற்கிடையில் பிரியங்கா உடலில் நான்கு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். கத்தியால் குத்தப்பட்டும், தீ வைத்து எரிக்கப்பட்டும் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
22-Apr-2025
28-Mar-2025