உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, துணி காய போட்ட போது, மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு எலவஞ்சேரி பகுதியை சேர்ந்த சிவராமனின் மகள் சுபத்ரா, 42. திருமணமாகாத இவர், சகோதரர்களான ராஜு, பிந்து ஆகியோருடன் வசித்தார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்து வீட்டிற்கு திரும்பியவர், துணிகளை இரும்பு கம்பியில் காய போட்ட போது, மின்சாரம் தாக்கியதில் தரையில் விழுந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி