உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்காரத்திலிருந்து தப்பிக்க ரயிலில் இருந்து குதித்த பெண்

பலாத்காரத்திலிருந்து தப்பிக்க ரயிலில் இருந்து குதித்த பெண்

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து, அதே மாவட்டத்தின் மேட்சல் என்ற இடத்துக்கு, புறநகர் ரயிலின் மகளிர் பெட்டியில், இளம்பெண் ஒருவர் கடந்த 22ம் தேதி இரவு பயணித்தார்.அப்போது அந்த பெட்டியில் அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து, மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர். அல்வால் நிலையத்துக்கு ரயில் வந்ததும், அந்த இரண்டு பெண்களும் இறங்கி விட்டனர். இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். அந்த பெட்டியில், 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறினார். ரயில் புறப்பட்டதும், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அந்த நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.அவரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண் குதித்தார். இதில் தலை, கன்னம், கை, கால்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி வழியாக சென்றவர்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை