உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைத்துனருடன் நெருக்கமாக இருந்த பெண் தற்கொலை

மைத்துனருடன் நெருக்கமாக இருந்த பெண் தற்கொலை

பெலகாவி: மைத்துனருடன் நெருக்கமாக உள்ள படங்களை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால், பெண் தற்கொலை செய்து கொண்டார்.பெலகாவி மாவட்டம், ராய்பாகின், மொரப் கிராமத்தில் வசிப்பவர் பிரசாந்த் காம்ப்ளே, 34. இவரது மனைவி ஆர்த்தி, 28. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரசாந்த் காம்ப்ளே பணி நிமித்தமாக ஊர், ஊராக செல்பவர். அவ்வளவாக வீட்டில் இருக்க மாட்டார்.இவரது சித்தப்பாவின் மகன் சாகர் காம்ப்ளே, 27, அவ்வப்போது பிரசாந்த் வீட்டுக்கு வருவார். இதனால் ஆர்த்திக்கும், சாகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.இந்நிலையில் சாகர் காம்ப்ளே, தன் அண்ணியுடன் நெருக்கமாக இருந்த படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இது, வேகமாக பரவியது. இது, பிரசாந்த் காம்ப்ளேவுக்கும் தெரிந்தது. கோபமடைந்த அவர் பஞ்சாயத்து பேசி, மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.'மனைவியை அனுப்ப நீயே காரணம்' என, சாகருடன், பிரசாந்த் சண்டை போட்டுள்ளார். மைத்துனருடன் இருந்த கள்ளத்தொடர்பு வெளி உலகுக்கு தெரிந்ததால், மனம் நொந்த ஆர்த்தி, நேற்று அதிகாலை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த சாகர், ஊரை விட்டு ஓடிவிட்டார்.இதுகுறித்து, ராய்பாக் போலீசார் விசாரிக்கின்றனர். சாகரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை