உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாதவிடாய் காரணமாக தாமதமாக வந்த பெண்கள்: ஆடைகளை கழற்றி சோதித்த பல்கலை ஊழியர்கள்

மாதவிடாய் காரணமாக தாமதமாக வந்த பெண்கள்: ஆடைகளை கழற்றி சோதித்த பல்கலை ஊழியர்கள்

ஹரியானா: ஹரியானாவில், மாதவிடாய் காரணமாக பணிக்கு தாமதமாக வந்த நான்கு துாய்மை பணியாளர்களை, ஆண் மேற்பார்வையாளர்கள் வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றி, சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் ரோஹ்தக்கில், மகரிஷி தயானந்த் பல்கலை அமைந்துள்ளது. இங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த 26ம் தேதி ஹரியானா கவர்னர் அசீம் குமார் கோஷ் சென்றார். அன்றைய தினம், பல்கலையில் பணிபுரியும் சில பெண் துாய்மை பணியாளர்கள் வேலைக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அவர்களின் மேற்பார்வையாளர்களான வினோத் குமார் மற்றும் விதேந்தர் குமார் கேள்வி எழுப்பினர். அப்போது, அதில் நான்கு பேர் மாதவிடாய் காரணமாக தாமதமாக வந்ததாக கூறியுள்ளனர். இதை ஏற் காத, வினோத் மற்றும் விதேந்தர், அதை நிரூபிக்கும்படி பெண் பணியாளர்களிடம் கூறியதுடன், வலுக்கட்டாயமாக அவர்களின் ஆடைகளை கழற்றி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களின் பைகளில், 'சானிட்டரி பேட்' உள்ளதா என சோதனை செய்ததுடன், அவற்றை ஆதாரத்துக்காக மேற்பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்கலை வளாகம் முழுதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களுடன் பேச்சு நடத்திய பல்கலை நிர்வாகம், உடனடியாக இரு மேற்பார்வையாளர்களையும் பணியிடை நீக்கம் செய்தது. விசாரணைக்காக, வினோத் மற்றும் விதேந்தர் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த ஹரியானா மகளிர் கமிஷன், பல்கலை வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ