உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!

பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!

புதுடில்லி: பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றியை நோக்கி உள்ள நிலையில், அடுத்ததாக தங்களின் இலக்கு மேற்கு வங்கம் தான் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.243 தொகுதிகளைக் கொண்ட பீஹார் சட்டசபை நடந்த தேர்தலில் பாஜ மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஹாகட்பந்தன் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், பீஹாரைத் தொடர்ந்து மேற்கு வங்கம் தான் தங்களின் அடுத்த இலக்கு என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; பீஹார் இளைஞர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். அராஜகமான அரசை அமைக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். நாங்கள் (தேஜ கூட்டணி) பீஹாரில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்ததாக எங்களின் இலக்கு மேற்கு வங்கம் தான். பீஹாருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஊழல் மற்றும் கொள்ளையடிக்கும் அரசை மக்கள் ஏற்கவில்லை. அமைதி, நீதி மற்றும் வளர்ச்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.இன்றைய இளைஞர்கள் அந்த காலத்தை (லாலு ஆட்சி) நேரடியாகக் பார்க்காவிட்டாலும், அவர்களின் முன்னோர்கள் அதனை கண்டுள்ளனர். பீஹார் அரசில் தேஜஸ்வி யாதவ் குறுகிய காலமே இருந்த போதும், அவர் மேற்கொண்ட குழப்பத்தைப் பரப்பும் முயற்சிகளை மக்கள் பார்த்துள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பேசும் தமிழன்
நவ 14, 2025 19:20

அப்படியே தமிழ் நாட்டுக்கும் வாருங்கள்..... இங்கேயும் உங்களுக்கு வேலை காத்து கொண்டு இருக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
நவ 14, 2025 20:28

தமிழக பாஜகவில் இருக்கும் கோஷ்டிகளின் எண்ணிக்கை தமிழக காங்கிரசின் கோஷ்டிகளை விட அதிகம் ...... அதை முதலில் சரிசெய்யுங்கள் ....


Iyer
நவ 14, 2025 18:03

மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மட்டும் போதாது. பிஜேபி க்கு மேற்கு வங்கத்தில் பெரும் பொறுப்பு உள்ளது. 1 கோடிக்கும் மேல் உள்ள கள்ளக்குடியேறிகளை அடையாளம் கண்டு வெளியேற்றவேண்டும்


Nagarajan D
நவ 14, 2025 17:37

ஒருத்தன் ஒரு ஜாதி அல்லது ஒரு கூட்டத்தை வைத்து ஒரு கட்சி ஆரம்பிக்கிறான்... கொஞ்சம் வருடங்களில் அந்த கட்சி குடும்ப கம்பெனியாகிவிடுகிறது பிறகு அதிலிருந்து ஒருத்தன் தனக்கு பதவி கிடைக்காது என்றோ அல்லது பதவி வேண்டும் என்றோ ஒரு புதிய கூட்டத்தை உருவாக்குறான்... இப்படியே தான் இது வரை தி க, தி மு க admk mdmk dmdk pmk rjd sp bsp தெலுகு தேசம், சரத் பவார் அஜித் பவார் போன்ற ஒட்டுண்ணிகள் நாட்டை சீரழிக்கிறது... இதை தடுக்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் பல ஆயிரம் கோஷ்டிகள் கட்சிகளாக தங்களை பதிவு செய்து தேர்தல் நேரத்தில் பெட்டி வாங்கி பிழைப்பு நடுத்துவானுங்க ...


Barakat Ali
நவ 14, 2025 15:13

2026 லும் மேற்குவங்கத்தில் TMC வெல்லும் ...... ஆனால் அக்கட்சி போராட வேண்டியிருக்கும் ....


Kumar Kumzi
நவ 14, 2025 16:01

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கன்ஸ் உதவியோடு மும்தா பேகம் வெற்றி பெற்றாள் இம்முறை SIR இல் இருந்து ரோஹிங்கியா தப்ப முடியாது


Balasubramanian
நவ 14, 2025 14:58

தமிழகத்தில் காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை - என்று சொல்லிவிடுமோ இதர கட்சிகள்?


R.MURALIKRISHNAN
நவ 14, 2025 14:26

நான் சொல்லேன்ல, ராகுல் பிஜேபிக்குத்தான் வேலை பாத்தாருன்னு இப்ப பாரு ரிசல்ட்டை.


Godfather_Senior
நவ 14, 2025 14:12

அப்போ அவங்க தமிழ்நாட்டை மறந்துட்டாங்களா? இல்லே, அதுக்கு வேற பிளான் வச்சிருக்காங்களா?


Kulandai kannan
நவ 14, 2025 14:02

அப்படியே தமிழ்நாட்டையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்.


Venugopal, S
நவ 14, 2025 13:58

துடைத்து ஏறிய பட வேண்டும்...காட்டாட்சி ஒழிக்க பட வேண்டும்


Mohan
நவ 14, 2025 13:56

துட்டுக்கு வோட் தமிழ்நாடு போல ஆபர் குடுத்து வாங்கிருக்கீங்க ..கஜானா காலி அவ்ளோதான் ...


Kumar Kumzi
நவ 14, 2025 16:05

முரசொலி கூமுட்ட அந்த பத்தாயிரம் ஒருமுறை தான் வழங்கப்படும் மாதாமாதம் அல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை