உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை; வரலாற்றில் இதுவே முதல் முறை: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை; வரலாற்றில் இதுவே முதல் முறை: பிரதமர் மோடி பெருமிதம்

போபால்: 'இந்திய வரலாற்றில் முதல் முறையாக, முழு உலகமும், இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது' என பிரதமர் மோடி பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mu5tp54a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த 2025 உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் வரவேற்றார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் முன்னணி மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது.

பொருளாதாரம்

வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் தொடரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறைகள் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வணிக இடம்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இன்று இங்கு வந்துள்ளனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக முழு உலகமும், இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது.செழிப்பான தொழில்களுடன், மத்தியப் பிரதேசம் ஒரு விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சிற்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மன்னிப்பு கேட்டார் பிரதமர்!

பிரதமர் மோடி வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சி தாமதாமாக ஆரம்பித்தது. இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், 'மாநாடு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்ததால் தாமதமாக கிளம்பி வந்தேன். பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகளை மூடப்பட்டால், குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு செல்ல தாமதம் ஏற்பட்டது. குழந்தைகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடையவே தாமதமாக புறப்பட்டேன்' என குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramaswamy Jayaraman
பிப் 24, 2025 15:51

வளர்ந்த இந்தியா என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பணமதிப்பு வீழ்ந்துகொண்டயிருக்கிறது. அதன் அர்த்தம் என்ன. யாராவது, இதை பற்றி எங்காவது பேசியிருக்கிறார்களா. ஏன் இந்த நிலைமை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொல்றாங்க. அரிசி விலை மிக மிக அதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறி இருக்கிறது. மக்களும் கவலைப்படவில்லை, மீடியாக்களும் கவலைப்படவில்லை, நான் யார் இதை பற்றி பேச,


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 13:40

இப்படியே பேசி அந்த 21 மில்லியன் டாலர் விஷயத்தை விசாரிக்காமே அமுக்கிடுங்க ......


KavikumarRam
பிப் 24, 2025 16:12

ஹலோ உபி. அமேரிக்காகாரன்கிட்ட பிஜேபி ஆட்சிவந்திரக்கூடாதுன்னு இந்த பிச்சை காசை வாங்குனது காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி திருட்டுக்கூட்டத்தோட என் ஜி ஓ குரூப். அந்த பிச்சைய இப்போ அமெரிக்காரன் கண்டுபிடிச்சு நிப்பாட்டிட்டான். நீ கொந்தளிக்க வேண்டியது மன்மோகன் சிங், சோனியா, ராகுல் காந்திகிட்ட. பாஜக கிட்ட இல்ல. ஆனா ஒன்னு ஒத்துக்கிறேன். தற்போதைய மோடி அரசாங்கம் இதை லேசுல விடாம மொத்த பிச்சை எடுத்த மொத்த இந்தி கூட்டணி கூட்டத்தையும் கூண்டுல ஏத்தணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 21:40

Please grow. மோடியை / பிஜேபியைக் குறை சொன்னா உ பி யாகத்தான் இருக்கணுமா ??


V வைகுண்டேஸ்வரன்
பிப் 24, 2025 22:17

மோடியை / பிஜேபியைக் குறை சொன்னா உ பி அல்லது மூர்க்ஸ் என்று அன்போடு அழைக்கப் படுவீர்கள். ஆனாலும், சங்கிகளுக்கு தடித்த தோல் தான். அவங்க கட்சி தான் ஒன்றிய அரசில். எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி யே இருக்கறானுங்கப்பா


M. PALANIAPPAN, KERALA
பிப் 24, 2025 13:17

வாழ்க பாரதம், நீடுழி வாழ்க மோடி ஜி