உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவில் புழு: மாணவரை தாக்கிய பள்ளி வார்டன்

உணவில் புழு: மாணவரை தாக்கிய பள்ளி வார்டன்

பீதர் : உணவில் புழுக்கள் இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய மாணவரை, பள்ளி வார்டனாக பொறுப்பு வகிக்கும் ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பீதர், அவுராத் சந்தபூர் கிராமத்தில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 250 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லையாம். இது பற்றி, பல முறை மாணவர்கள் புகார் செய்தும் பயனில்லை.நேற்று காலையில் பள்ளியில் பரிமாறப்பட்ட உணவில், புழுக்கள் இருந்துள்ளன. இதுகுறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த உறைவிட பள்ளி வார்டன் சிவகுமார், அந்த மாணவரை மனம் போனபடி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது முதுகு, கைகளில் காயம் ஏற்பட்டது.இதனால் மாணவர்கள் கொதித்தெழுந்து, பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். வார்டன் சிவகுமார், பள்ளி முதல்வர் பகவந்த் காம்பளே மீது, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !