உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிருங்கேரி மடத்துக்கு நிதி அமைச்சர் வருகை

சிருங்கேரி மடத்துக்கு நிதி அமைச்சர் வருகை

சிக்கமகளூரு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிருங்கேரி மடத்துக்கு வருகை தந்தார்.சிக்கமகளூரின் சிருங்கேரி வரலாற்று பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக விளங்குகிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் அவ்வப்போது சிருங்கேரிக்கு வருகை தந்து, சாரதாம்பிகையை தரிசிக்கின்றனர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் குடும்பத்துடன் நேற்று முன்தினம், சிருங்கேரிக்கு வந்திருந்தார். சாரதாம்பிகையை தரிசித்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார். அதன்பின் சிருங்கேரி மடாதிபதியை சந்தித்து, ஆசி பெற்றனர். இரவில் சிருங்கேரி மடத்திலேயே தங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை