உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு, 2025ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலை எழுதிய விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படும் என சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்காக சாகித்ய அகாடமியின் பாலசாகித்ய புரஸ்கார்விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழக பள்ளிகல்வித்துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.https://x.com/mkstalin/status/1935331234412118131 அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் 'கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக யுவபுரஸ்கார் பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினைப் பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது அரசின் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: 2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://x.com/annamalai_k/status/1935292664053911746ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள விஷ்ணுபுரம் சரவணன் , கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர். விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Oviya Vijay
ஜூன் 18, 2025 17:16

என்னோட மைண்ட் வாய்ஸ்: நம்ம பேருல நாவல் எழுதின ஒருத்தருக்கு விருதா... வாவ்... மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் அன்பரே...


முக்கிய வீடியோ