உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபாய அளவை தாண்டியது யமுனை நீர்மட்டம்

அபாய அளவை தாண்டியது யமுனை நீர்மட்டம்

புதுடில்லி: டில்லி பழைய ரயில்வே பாலம் அருகே நேற்று மதியம் 2:00 மணிக்கு யமுனை நதி நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி 205.36 மீட்டரை எட்டியது. நதியின் நீர்மட்டம் 206 மீட்டரை எட்டினால் கரையோர மக்கள் வெளியேற்றப்படுவர். நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு 204.60 மீட்டராக இருந்த நீர்மட்டம் நேற்று அதிகாலை 204.80 மீட்டரை எட்டியது. நாளை, 206 மீட்டரை தாண்டும் என நீர்வளத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து, 36,064 கனஅடி, வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 57,460 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் டில்லியை அடைய, 48 முதல் 50 மணி நேரம் ஆகும். இரு அணைகளிலும் நீர் திறக்கப்படுவதே யமுனையில் நீர்மட்டம் உயர காரணமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
ஆக 19, 2025 17:41

ஒரு சூது கூட்டம் நாட்டுப் பற்று என்ற பெயரில் அனைத்து கட்சியிலுமே அதிகாரம் செலுத்தி வருகிறது. கெட்டது செய்வதற்கு திட்டமிடுபவர்களுக்கு நல்லது கண்ணீர் படாது. ஒரு மொழியை திணித்து பழ/பல மொழியை அழித்து மக்களை இணைக்கலாம் என்று நினைப்பது கொடூரமானது. அதை விடுத்து இயற்கையான நதிகளை இணைத்து வாழ்வில் இன்பமுறலாம்


SUBRAMANIAN P
ஆக 19, 2025 14:13

வடக்கே காஷ்மீரிலிருந்து மேற்கே குஜராத்திலிருந்து கிழக்கே அஸ்ஸாம், மேகாலயா விலிருந்து அனைத்து நதிகளையும் இணைத்து அங்கங்கே மேற்கு கடலிலும், கிழக்கு கடலிலும், தெற்கு கடலிலும் கலக்கும்படி கன்னியாகுமாரி வரை கொண்டுவந்தால் இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெரும். உலகத்துக்கே உணவு ஏற்றுமதி செய்யலாம். செழிப்பான ஒரு நாடாக இந்தியா மாறும். ஆனால் இது சாதாரண திட்டம் அல்ல.. சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே காங்கிரஸ் அரசு இதை முன்னெடுத்திருந்தால் இந்நேரம் இந்தியாவின் வளர்ச்சி எங்கோ சென்றிருக்கும். சுயநல காங்கிரஸ் கூட்டணி அரசியல்வாதிகளால் அவர்கள் செழித்ததை மட்டுமே நாம் பார்த்தோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை