உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி, அம்பானி சொத்து மதிப்பு குறைந்தது; காரணம் இதுதான்!

அதானி, அம்பானி சொத்து மதிப்பு குறைந்தது; காரணம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெவ்வேறு காரணங்களால், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோர் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.ப்ளூம்பெர்க் வெளியிட்டு இருந்த, 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி, கவுதம் அதானி வெளியேறி உள்ளனர். தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 120.8 பில்லியன் டாலரில் இருந்து 96.7 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரிவு காரணம். அதேபோல் கடனும் அதிகரித்துள்ளதால் பங்கு மதிப்பு சரிந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.80 சதவீதம் சரிந்துள்ளது. தொழில் அதிபர் கவுதம் அதானி சொத்து மதிப்பு 6 மாதங்களில் 122.3 பில்லியன் டாலரில் இருந்து 82.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டும், அமெரிக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் பங்குகள் சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 14 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
டிச 18, 2024 22:20

நமது ஜீ ரொம்பவே வருத்தப் படுவாரே!


தத்வமசி
டிச 18, 2024 20:28

அப்பாடா ராகுல் சந்தோசமா ?


அப்பாவி
டிச 18, 2024 19:32

Sunder, சுத்த வெள்ளந்தியா இருக்கியே. அதானியும், அம்பானியும் சொந்த காசு போட்டு பிசினஸ் பண்ணுவதில்லை. எல்லாம் பேங்க் லோன், மக்கள் முதலீட்டில் தான். அவிங்க மட்டுமில்லை. பில் கேட்ஸ், பிச்சை, நாடெல்லா எல்லோரும் அவிங்க பணத்த தொழில்ல போட ஒண்ணும் முட்டாள்களில்லை.It is called OPM, Other People's Money.


அப்பாவி
டிச 18, 2024 17:23

லஞ்சம் குடுத்தே சொத்தில் 2200 கோடி குறைஞ்சிருக்கும்.


Sundar R
டிச 18, 2024 15:22

தமிழக அரசியல்வாதிகள் நம் பொதுமக்களின் பாக்கெட்டில் இருக்கிற காசையெல்லாம் எடுத்துக்கிறாங்க சார். அதை முதலீடாக வைத்து கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துகிறார்கள். அடானி, அம்பானி போன்றோர் சொந்த பணத்தை முதலீடு செய்து கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துகிறார்கள். பொதுமக்களாகிய நாம் அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு அடானி, அம்பானி ஆகியோர் நடத்தும் நிறுவனங்களிலிருந்து ஷேர் வாங்குகிறோம். ஹிண்டன்பெர்க், அமெரிக்காவில் வழக்கு போன்ற இடையூறுகள் வந்தால் அடானி நிறுவனங்களின் ஈக்விட்டி மதிப்பு சரிகிறது. அது அடானி கம்பெனிகளில் முதலீடு செய்த மக்கள் அனைவரையும் பாதிக்கும். அடானியிடம் லஞ்சமாக வாங்கிய பணத்தை அரசியல்வாதிகள் அடானியிடம் திருப்பிக் கொடுத்தால் அடானியின் நிறுவனங்கள் சரிவிலிருந்து உடனடியாக மீண்டு ஈக்விட்டி மதிப்பு பழைய நிலைக்குத் திரும்பும். நம் முதலீட்டாளர்கள், அடானி மற்றும் அவரது நிறுவனங்கள் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பும்.


MADHAVAN
டிச 18, 2024 13:23

பாஸு , லஞ்சம் கொடுத்ததுதான் காரணம், அதை சொல்லுஙக, அதானி அம்பானி சாப்பிடும் சாப்பாட்டில் நான் காண்டம் வாங்கும்போது அரசாங்கத்துக்கு நான் செலுத்திய வரி உள்ளது,


hari
டிச 18, 2024 15:31

முன்னெச்சரிக்கை முக்கியம் மாதவா...


kulandai kannan
டிச 18, 2024 12:57

Anti Indians will be happy


Srinivasan Krishnamoorthi
டிச 18, 2024 12:45

எல்லாம் பப்பு சோர்ஸ்


Nandakumar Naidu.
டிச 18, 2024 11:55

இந்தியாவின் தேச விரோத, சமூக விரோத, இந்து விரோத எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு இது தானே தேவை. வரும் தேர்தல்களில் இப்போது உள்ள எதிர்க்கட்சிகளை மக்கள் மண்ணோடு மண்ணாக அடையாளம் தெரியாமல் நிரந்தரமாக தூக்கி அடிக்க வேண்டும்.


ديفيد رافائيل
டிச 18, 2024 11:50

சொத்து மதிப்பு குறைந்ததுன்னா நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கால கட்டத்துல jio rege 1699 rupees one year க்கு unlimited use பண்ணேன். இப்ப one year க்கு 3599 rupees க்கு unlimited use பண்றேன். சொத்து மதிப்பு குறைஞ்சதுன்னு சொன்னா பொய் தான்.


புதிய வீடியோ