உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்

வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அரசியல் நலன்களுக்காக மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தடுக்கின்றனர் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார்.தமிழகத்தில் மும்மொழிக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எடுத்துள்ளன. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம், இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r89dgafu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விஷயத்தில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தி.மு.க., கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந் நிலையில் மும்மொழி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது; இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மட்டுமே பாதிக்கும் வகையில் சுயநலன் சார்ந்த அரசியல் நலன்களுக்காக மும்மொழி பற்றிய சர்ச்சை உருவாக்கப்பட்டு வருகிறது. உ.பி.,யில் உள்ள பள்ளிகளில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இந்த முறை, இங்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. உ.பி.,யில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளை கற்பிக்கிறோம். அதனால் உ,.பி., சிறியதாகிவிட்டதா? இங்கு தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. தங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காக இதுபோன்ற மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை தடுக்கின்றனர். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Saai Sundharamurthy AVK
ஏப் 01, 2025 22:31

யோகிஜி சொல்வது உண்மை தான். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் மத்திய அரசின் திட்டங்கள் எல்லாவற்றையும் திமுக நிராகரித்து தமிழர்களை வஞ்சிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்கள். அது இப்போது குஜராத்துக்கு போய் விட்டது. குளச்சல் துறைமுகம் வேண்டாம் என்றார்கள். அது இப்போது கேரளாவுக்கு போய் விட்டது. ஹைட்ரா கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்களை வேண்டாம் என்று உருட்டி விட்டார்கள். நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் வேண்டாம் என்றார்கள். டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்றார்கள். எட்டு வழி சாலை வேண்டாம் என்றார்கள். இப்போது வெளிநாடு, உள்நாட்டு முதலீடுகள் எல்லாவற்றையும் கோட்டை விடுகிறார்கள். ஆந்திராவுக்கு செல்கின்றன. மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்கிறார்கள். நீட் வேண்டாம் என்கிறார்கள். காவேரி, முல்லைப்பெரியாறு நீர் வேண்டாம் என்கிறார்கள். ஆனால், டாஸ்மாக், மணல், ஜல்லி தான் வேண்டும் என்கிறார்கள். தமிழன், தமிழ்நாடு என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் திமுக பார்க்கிறது...... !


Gokul Krishnan
ஏப் 01, 2025 22:21

உ பி யில் எத்தனை பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் எவ்வளவு மாணவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் படிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தெளிவாக கூறிவிட்டு தமிழகத்தை பார்த்து ஹிந்தி படி மூன்றாவது மொழி படி என்று கூற வேண்டும் சீனா ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகள் செயற்கை அறிவுத்திறன் தொழில் நுட்பம் என்று எங்கோ சென்று விட்டனர் இவர்கள் ஹிந்தியை பிடித்து தொங்கி கொண்டு உள்ளனர் முன்பு அண்ணாமலை மீது ஒரு நம்பிக்கை இருந்தது ஆனால் இந்த மொழி விவகாரத்தில் அந்த் நம்பிக்கை முற்றிலும் சரிந்து விட்டது


தாமரை மலர்கிறது
ஏப் 01, 2025 19:44

யோகி சொன்னா சரி.


Rasheel
ஏப் 01, 2025 18:45

தமிழ்நாட்டு பார்டரை தாண்டினால் தமிழ் விற்பனை ஆகவில்லை. இதுதான் உண்மை. உண்மையாக தமிழை காக்க வேண்டுமானால் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். கல்லூரி கல்வி வரை தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்களுக்கு அரசு வேலைக்கு ஒரு தகுதியாக இருக்க வேண்டும். இது தவிர உலகத்தில் அதிகம் பேசப்படுகின்ற, அதிகம் வேலை வாய்ப்பு அளிக்கும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளை கற்க வேண்டும். இது தவிர தமிழ் நாட்டிற்கு உள்ளே வரும் பங்களாதேஷிகளை ரோஹினியாக்களை தடுத்து நிறுத்த வேண்டும்.


अप्पावी
ஏப் 01, 2025 17:26

உ.பி க்காரனுக்கு பிரயோஜனமில்லாத இந்தியைப் படிப்பிச்சு அவன் பஞ்சம் பொழைக்க வண்டி வண்டிய்ச இங்கே வந்துடறான். இங்கே அவன் தமிழ் கத்துக்கிட்டு, அவிங்க பசங்களும் தமிழ் படிக்கிறாங்க. இவுரு விவரம் தெரிஞ்சே அடிச்சு உடறாரு.


Rengaraj
ஏப் 01, 2025 16:51

நம்ம இப்படியே வடக்கன், இருமொழி , எங்கும் தமிழ், எதிலும் தமிழ், தனித்தமிழ், ஹிந்தி திணிப்பு அப்படின்னு கடந்த ஐம்பது வருஷமா பேசிக்கிட்டே இருக்கோம் . ஆனா மெல்ல மெல்ல வட இந்தியர்கள் உத்திரபிரதேசம் , மேற்கு இந்தியர்கள், குஜராத்திகள், , மார்வாரிகள், கிழக்கு இந்தியர்கள் பீஹார், ஒரிசா, பெங்காலிகள், , அப்படின்னு எல்லோரும் இங்கே வந்துகிட்டேதான் இருக்காங்க. இதற்கு சென்னை, கோவை , மதுரை நகரங்கள் முக்கிய உதாரணங்கள். நாம குறைஞ்ச கூலின்னு அங்கே இருந்து இங்கே வந்தவர்களை நம்பறோம். . வியாபாரத்துக்கும் , பணத்துக்கும் பணம் படைத்த அவங்களை நம்பறோம், கேக்கறோம். மலையாளிகளை பற்றி சொல்லவே வேணாம். கோவை சிறந்த உதாரணம். நம்மளும் பெங்களூரு, மும்பை, டில்லி அப்படின்னு போய்கிட்டுதான் இருக்கோம். சென்னை , கோவை போன்ற நகரங்களில் வேற்றுமொழி பேசறவங்க நடத்தற ஸ்கூல், காலேஜ் இவற்றில் பெரும்பாலும் நம்ம ஆளுங்கதான் படிக்கறாங்க. சேட்டுக்கடையில அடமானம் வைக்கறவங்க நம்மவூர்ல ரொம்ப பேர் இருக்காங்க. ஆனால் ஓட்டுக்காக இந்த தமிழக அரசியல்வாதிகள் மொழியை வைச்சு பொழைப்பு நடத்தறாங்க . நல்லா பார்த்தா அவங்க வீட்டுலேயும் , கடையிலேயும் ஒரு வடக்கத்தான் வேலைசெய்வான். காரணம் கேட்டால் நம்ம ஆளுங்களை விட அவங்க கூலி மிச்சம்னு சொல்வாங்க. இந்த அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு வெள்ளை பண வியாபாரத்துக்கு வேற்றுமொழி பேசறவங்ககிட்டதான் போவாங்க. . நம்ம ஆட்களை நம்பமாட்டாங்க. ஓட்டுபோடற நாம இதையெல்லாம் கவனிப்பதில்லை.


என்றும் இந்தியன்
ஏப் 01, 2025 16:49

தயவு செய்து இவரை பிரதமராக்காதீர்கள். அப்படி இவர் பிரதமரானால் திமுக, காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்படும், அவர்கள் இந்திய குடியுரிமை பறிக்கப்படும் என்ற பயத்தில் திமுக காங்கிரஸ் கட்சிகள் உளறிக்கொண்டே இருக்கின்றன பயத்தில். மேலே இவர் பேசியது அப்படித்தானிருக்கின்றது.


தமிழன்
ஏப் 01, 2025 15:26

உன்னோட மாநிலத்தோட லட்சனத்த மொதல்ல பாரு அப்புறமா அடுத்தவன் முதுகுல இருக்குற அழுக்க தொடைக்கலாம் அங்க என்ன எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்ந்து பாலாறும் தேனாறும் ஓடுதா??


Indian
ஏப் 01, 2025 14:49

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய ப ஜெ கா அரசு .


Indian
ஏப் 01, 2025 14:36

சாமியாரெல்லாம் சாமியார் வேலையை பார்க்காமல் , அரசியலுக்கு வந்தால் நாடு விளங்குமா ??. மொதல்ல மத்தவங்கள விமர்சிக்கிறதுக்கு ஒரு தகுதி வேணும். ?


SRIDHAAR.R
ஏப் 01, 2025 15:08

அரசியலுக்கு வர, தமிழரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்


V Venkatachalam
ஏப் 01, 2025 17:13

அதானே.. இந்தியன் சொல்றது ரொம்ப கரீட்டு., தமிழ் நாட்டு 60 வருஷ வரலாறு படி கொள்ளையடிக்ககறவன்தான் வரணும்..யோகி மாதிரி ஆளுங்க வரவே கூடாது.‌


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை