உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் தொல்லை  வாலிபர் கைது

பாலியல் தொல்லை  வாலிபர் கைது

பெங்களூரு; பெங்களூரு மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில், இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயிலுக்காக, வரிசையில் காத்து நின்றார். அவர் பின்பு நின்ற வாலிபர் ஒருவர், கூட்டநெரிசலை பயன்படுத்தி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களிடம் கூறினார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார்.அவரை ரயில் நிலைய ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். தனது தவறை ஒப்புக்கொண்ட வாலிபர், இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரை இளம்பெண்ணை மன்னிக்கவில்லை.'பெண்கள் அமைதியாக இருந்தால், உன்னை மாதிரி ஆட்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வீர்கள். உனக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்' என்று கூறினார். இதன்பின்னர் உப்பார்பேட் போலீசார் அங்கு வந்து, வாலிபரை கைது செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை