உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டலில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

ஓட்டலில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

பஸ்சிம்விஹார்: டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.நிஹால் விஹாரைச் சேர்ந்த அபினவ் சாகர், 24, என்ற வாலிபரும் ஒரு இளம்பெண்ணும், பஸ்சிம் விஹார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினர். நேற்று காலை வழக்கம்போல் அறை திறக்கவில்லை என்பதை அறிந்த ஓட்டல் நிர்வாகம், போலீசாருக்கு தகவல் கொடுத்தது.அங்கு விரைந்து வந்த போலீசார், அறைக் கதவை திறந்து பார்த்தபோது, துாக்கிட்ட நிலையில் அபினவ் சாகர், இறந்தது தெரிய வந்தது. அவருடன் தங்கியிருந்த பெண் பற்றி தெரியவில்லை.இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் முடிவெடுப்பர் என்று தெரிகிறது.சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ