திருமண ஏக்கம் இளைஞர் தற்கொலை
நாராயணப்பன பாளையா: திருமணத்துக்கு பெண் கிடைக்காத ஏக்கத்தால், ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரின் நாராயணப்பன பாளையாவில் வசித்தவர் வெங்கடேஷ், 29; ஆட்டோ ஓட்டுனர். மகனுக்கு திருமணம் செய்ய விரும்பிய பெற்றோர், பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் வெங்கடேஷ் உடல் பருமனாக இருந்ததால், பெண் வீட்டினர் பெண் கொடுக்க மறுத்தனர்.சில இடங்களில் இவரை பிடிக்கவில்லை என, பெண்ணே கூறிவிட்டார். 15க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் பார்த்தும், இவர் உடல் பருமனே இவரது திருமணத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.தான் குண்டாக இருப்பதால், தனக்கு பெண் கிடைக்காது; திருமணமும் நடக்காது என, மனம் நொந்த வெங்கடேஷ், நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.