ஜிம்பாப்வே மாணவர் கொலை
பதின்டா:கம்பால் தாக்கப்பட்ட, ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த மாணவர், எட்டு நாட்களுக்கு பின் நேற்று இறந்தார். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஜிவாயே லீரோய், 22, பதின்டா நகரில் உள்ள, பஞ்சாபின் குரு காசி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த 12ம் தேதி, காரில் அவர் வந்த போது, அந்த பல்கலைக்கழக பாதுகாவலர்களுக்கும், லீரோய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாதுகாவலர்கள் ஒன்பது பேர் சேர்ந்து, கம்பாலும், கைகளாலும் லீரோயை தாக்கினர். தில்பிரீத் சிங் உள்ளிட்ட பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதில், அவர் படுகாயம் அடைந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லீரோய் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, ஒன்பது பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், எட்டு பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள தில்பிரீத் சிங்கை தேடி வருகின்றனர்.